தாம்பத்தியம்… தாம்பத்தியம் என்ற ஒற்றை வார்த்தையில் எத்துனை இன்பங்கள்… இரு உடல் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து., தனது எதிர்கால சந்ததியை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு தனது சந்ததியை உருவாக்குகிறது. என்னதான் நாம் இணைய வாழ்க்கையில் தாம்பத்தியத்திற்கு உள்ளே இருக்கும் பல சந்தேகங்களை நாம் இணையத்தில் படித்து தெரிந்து கொள்வது அவசியமானதாகிறது. அந்த வகையில்., தாம்பத்தியத்தில் பெண்களின் மார்பகங்களின் அளவு அதிகமாக இருந்தால்., அதிக இனம் கிடைக்குமா? என்ற சந்தேகமானது இருக்கும். இன்றுள்ள நிலையில்., பெரும்பாலான ஆண்களை கவரும் விதமாக பெண்களின் மார்பகங்கள் உள்ளதாக அனைவரின் மனதிலும் ஒரு பொய்யான பிம்பம் ஒன்று மறைவாக எழுப்பப்பட்டுள்ளது.
உண்மையில் மார்பகங்களின் அளவு மற்றும் அதன் தோற்றம் நம்மிடையே எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. நாம் சிறுவயதில் இருந்து வளர்ந்து சுற்றுவட்டாரங்கள் மற்றும் நண்பர்களின் எண்ணங்களாலேயே இந்த எண்ணமானது விதைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. இதனை நம்பிய நாமும்., தாம்பத்தியத்திற்கு பெண்களின் மார்பகம் கவர்ந்திழுப்பதாக எண்ணிக்கொண்டு இருக்கிறோம். இதன் காரணமாக மார்பகத்தின் தோற்றத்தை பார்த்து தாம்பத்திய இன்பத்தை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். இதனாலேயே பெண்களிடம் உள்ள மார்பகங்கள் ஆண்களால் அதிகளவில் கவரப்படுகிறது. தாம்பத்திய ஆசையை தூண்டிவிடும் பணிகளை தவிர பிற பணிகள் மார்பகங்களுக்கு தாம்பத்தியத்தில் இல்லை என்பதே உண்மை.
இதனை அறியாத பெண்கள் மார்பகத்தின் அளவால் தாம்பத்தியத்தில் தனது துணையை திருப்திப்படுத்த இயலவில்லை அல்லது முடியாது என்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். இந்த எண்ணமானது நகரத்து பெண்கள் முதல் கிராமத்து பெண்கள் வரை அனைவரிடமும் உள்ளது. இந்த விஷயத்தை ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணத்தையும் கற்பனையும் பொறுத்து அமைகிறது. மார்பகங்கள் என்பது குழந்தைகளுக்கு பாலூட்ட மட்டுமே., பிற தாம்பத்திய செயல்களுக்கு கிடையாது. பெரும்பாலான நடிகைகள் தங்களது ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்கு மார்பகங்களை அறுவை சிகிச்சை மூலமாக மாற்றி கொள்கின்றனர். சாதாரண பெண்களுக்கு இது தேவையற்ற ஒன்றே… மார்பகங்கள் என்பது குழந்தைக்கு பாலூட்டுவதற்கு மட்டும் தான்., பிற காரணங்களுக்கு கிடையாது என்று உங்களின் மனதில் பதியும் வரை மாற்ற இயலாது.