1.உங்களது காதலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதலிக்கு உணர்த்திக்கொண்டே இருங்கள். இது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
2.பல காதல் முறிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மை தான். காதலுக்கு, காதலிக்கும் திட்டம் போட்டு நேரம் ஒதுக்கும் ஆணிகள் பிழைக்க தெரிந்த புண்ணியவான்கள்.
3.எல்லாருடைய மனதும், மற்றவரது பாராட்டுக்குத்தான் ஏங்கிக் கிடக்கிறது. உங்கள் காதலி செய்யும் ஒவ்வொரு சின்னச்சின்ன செயலையும் பாராட்டுங்கள். அப்புறம் உங்களுக்கு இராஜ கவனிப்பு தான்.
4.கண்களை பார்த்து பிறருடன் உரையாடுவது நேர்மையை குறிக்கும். இது காதலில் மிக மிக அவசியம். காதலை அடையும் முன்பு காதலியின் கண்களில் நீங்கள் சரணாகதி ஆகிவிட வேண்டும்.
5.இருமனங்களுக்கான நெருக்கத்தை கைகள் வெளிப்படுத்தும். காதலில் பல நிமிடங்கள் மௌனமாக கழியும் போது, கைகளோடு கைகள் கோர்த்தபடியும், பற்றியபடியும் இருப்பது உங்களது உறவை இன்புறச்செய்யும்.
6.காதலுக்கு முத்தம் என்பது மொழி. பேசாத, சொல்ல முடியாத கதைகளை உதட்டின் ஸ்பரிசம் உணர்த்தும். பார்க்கும் போது, பிரியும் போதும் நெற்றியில் முத்தம் வைப்பது உங்கள் காதலை வளர்க்கும்.