பாதத்தில் வெடிப்பு என்பது பலரை சிரமத்திற்கு உள்ளாக்கும் விஷயமாக உள்ளது. பாத வெடிப்பினால் பலர் காரணத்தை தெரிந்தும்., தெரியாமலும் சாதாரண வெடிப்பாக இருக்கலாம் என்றும் எண்ணி வருகின்றனர். நமது பாதங்களை சுத்தமாக பராமரிக்காமல் இருக்கும் பட்சத்திலேயே பாத வெடிப்பானது உண்டாகிறது. இந்த வெடிப்பை சரிவர பராமரிக்காமல் இருக்கும் பட்சத்தில்., புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும்.
பாத வெடிப்பு பிரச்சனை பொதுவாக கிருமிகளின் தொற்று மூலமாகவும்., உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டினாலும் ஏற்படுகிறது. பாத வெடிப்பு பிரச்சனை ஏற்பட்டால் பாதத்தின் அழகும் குறைந்து., பாத வெடிப்பு புண்களாக மாறி வலியையும் ஏற்படுத்துகிறது. பாதத்தில் ஏற்படும் பாத வெடிப்புகளை இயற்கையான முறையில் சரி செய்யும் முறை குறித்து இனி காண்போம்.
நாள்தோறும் மாலை நேரத்தில் நமது பாதங்களை வெதுவெதுப்பான நீரில் சுமார் 10 நிமிடங்கள் ஊறவைத்து., ஸ்கரிப்பர் உதவியுடன் தேய்த்து கழுவ வேண்டும். நாள்தோறும் உறங்குவதற்கு முன்னதாக பாதத்தில் மாய்சுரைசர் அல்லது வாசலினை தடவிய பின்னர் சாக்ஸ் அணிந்து உறங்கினால்., பாதங்கள் மிருதுவாகி பளபளப்பாக மாறும்.
இரவு நேரத்தில் ஒரு தே.கரண்டி நீர்க்காத கிளிசரின் மற்றும் ஒரு தே.கரண்டி ரோஸ் வாட்டர்., ஒரு தே.கரண்டி எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து., பாதத்தின் பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி., காலை எழுந்தவுடன் இளம் சூடுள்ள நீரில் கழுவி வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை குணமாகும். நமது பாதங்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கு 2 தே.கரண்டி அரிசி மாவுடன் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து பேஸ்ட்டாக மாற்றி தடவ வேண்டும்.
நமது பாதங்கள் பித்தவெடிப்புடன் வறட்சியாக காணப்படும் பட்சத்தில்., ஒரு தே.கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது பாதம் எண்ணெய்யை சேர்த்து., இளம் சூடுள்ள நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து கழுவிய பின்னர்., தயார் செய்யப்பட்ட பேஸ்ட்டை தடவ வேண்டும். பாதத்தின் பித்த வெடிப்பானது துவக்க கடத்தில் இருக்கும் பட்சத்தில்., வெறுமையான தேன் மற்றும் ஆலிவு எண்ணெய்யை தடவி வரலாம். இந்த முறையை வாரத்திற்கு தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தினமும் சாப்பிடும் வாழைப்பழத்தை நன்கு மசித்து., பாதத்தில் தடவி சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர்., நீரினால் கழுவி வர பாத வெடிப்புகள் மறைய துவங்கும். எலுமிச்சை சாற்றினை இளம் சூடுள்ள நீரில் கலந்து., பாதங்களை வாரத்திற்கு ஒரு முறை., சுமார் 10 நிமிடங்கள் கழித்த பின்னர் கழுவினால் பாதங்களானது மென்மையாகும்.
பப்பாளி பழத்தினை நன்றாக அரைத்து., பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பானது மறைந்துவிடும். மருதாணியின் இலைகளை நன்றாக அரைத்து., பாத வெடிப்பு உள்ள இடத்தில் தேய்த்து வந்தால்., பித்த வெடிப்பானது உடனடியாக குணமாகும். கடுகின் எண்ணெய்யை தினம் தோறும் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால்., பாதத்தின் சொரசொரப்புத் தன்மை நீங்கி., பாதங்கள் மிருதுவாகும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணையை சமமான அளவில் எடுத்து., மஞ்சளுடன் சேர்த்து பாதத்தில் தடவினால்., பித்த வெடிப்பானது உடனடியாக நீங்கும். மேலும்., நமது பாதத்திற்கு ஏற்ற வடிவம் மற்றும் அளவில் இருக்கும் காலணிகளை அணிவது., குளித்ததும் பாதத்தில் ஈரத்தன்மை இல்லாத அளவில் உலர்த்துவது போன்றவதை செய்யலாம். எளிமையான முறையாக இரவில் உறங்குவதற்கு முன்னதாக கால்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து உறங்கினாலே போதுமானது.