ஆளி விதையில் இவ்வளவு நன்மைகளா ??

ஆளி விதையை (FLAX SEED ஐ) பல வடிவங்களில் வாங்கலாம், அதாவது (FLAX SEED POWDER, OIL, CAPSULES) ஆளி விதையின் எண்ணை, மாத்திரை மற்றும் தானியமாக உட்கொண்டால், அவை குடலினால் அவ்வளவாக உறிஞ்சப்படாமலே வெளியேறிவிடும். எண்ணை, மாத்திரைகளை விட, ஆளி விதையை மாவாக உணவுடன் சேர்த்து உண்டால், குடலினால் பெருமளவு உறிஞ்சப்படும். இதற்கு சுலபமான வழி ஆளிவிதையை (FLAX SEED) கடையில் வாங்கி, அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஆளி விதை எந்த விதமான சுவையும் இல்லாதது. ஆகவே, தினமும் இரண்டு தேக்கரண்டி ஆளிவிதை மாவை தண்ணீரில் கரைத்தோ, அல்லது தயிர் (YOGURT), பழச்சாறு அல்லது காலையில் உண்ணும் சீரியல்களில் போட்டு உண்ணலாம். மேலும் புட்டு, தோசை, இடியாப்பம், இட்டலி, இப்படியான நமது உணவு வகைகள் சமைக்கும் போது, இதனையும் சேர்த்து சமைக்கலாம்.

இந்த விதையை அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகலாம். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும்.சரி… இனி இதில் நிறைந்துள்ள சத்துகளையும், உடல் எடை குறைய இது எப்படித் துணைபுரிகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். துரித உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது. இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

லிக்னன்ஸ்’ (Lignans) எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.