கொலைகாரன் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு, ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்த ‘கொலைகாரன்’, மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என பெயரிடப்பட்டுள்ளது
‘இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்’ நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாகும்.