ஹாங்காங்கில் சீர்திருத்தங்களை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கானோர் விமானநிலையத்திற்கு செல்லும் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், பதினைந்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஹாங்காங் விமானநிலையத்திற்கு செல்வோர் ரயிலில் ஏறாமல் தடுக்கும் வகையில் போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதேபோல் பேருந்து நிலையமும் முற்றுகையிடப்பட்டது.
இதையடுத்து பயணிகள் தங்கள் சுமைகளை தூக்கிக்கொண்டு கால்நடையாகவே விமானநிலையத்தி அடைந்தனர். விமானநிலையத்திற்கு செல்லும் பாதைகளிலும் தடைகளை உருவாக்கி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்று வாரங்களாக போராட்டங்களில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன.