பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வனிதா சென்றதிலிருந்து அங்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உண்மையை கூறவேண்டுமென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல சுவரஷ்யம் இல்லை என்று தான் சமூக வலைதளங்கள் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், வாரம் வாரம் கமல் வரும் எபிஷோடில் ஃப்ரூட்டி காலர் என்று இருவர் கால் செய்து பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் தங்களது கேள்விகளை கேட்பார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் பெண் ரசிகை ஒருவர், லோஸ்லியாவிடம் சேரன் உங்கள் மீது காட்டும் பாசம் பொய் அது டிராமா என்று கவீன் கூறினாரே, அப்போது ஏன் நீங்கள் கோபப்படவில்லை, ஒரு அப்பாவாக இருந்தால் கண்டிப்பாக கோபம் வரும் தானே என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த லோஸ்லியா, இந்த வீட்டில் யார் என்னிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. 24 மணி நேரத்தில் 1 மணி நேரம் மட்டுமே உங்களுக்கு காட்டப்படுகிறது என்று பதில் கூறினார்.
இதற்கு பின்பு, வனிதாவும், சேரனும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒரு அப்பாவாக அவள் உங்களை நினைத்தால், இப்படி கவீனிடம் அவள் நெருங்கி பேசுவாளா? பழகுவாளா? அதை எல்லாம் விடுங்க அண்ணா? உங்களுக்கு என்று வெளியே குடும்பம், மகள்கள் இருக்கிறார்கள் அதை பாருங்க என்று கூறினார்.
இதுக்கு பேர் தான் கிடைத்த கெப்பில் கிடா வெட்டுவது என்று வனிதாவை இணையவாசிகள் திட்டி வருகின்றனர்.
சின்னப் பொண்ணு ஏதோ சொல்லிட்டா பார்த்துக்கிறலாம் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அதை விட்டு, அப்பா-மகளை இப்படி பிரிக்கிறாரே என்று திட்டி வருகின்றனர்.