இன்றுள்ள கால நிலையில் காமம் என்ற உணர்ச்சியை தீர்ப்பதற்கு மனிதன் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறான். தனக்கான தனக்குள் எழுந்த காம உணர்ச்சியை தீர்ப்பதற்காக எதிர் பாலின துணையின் மீது மோகம் – அவரை அடைதல் – விருப்பமில்லா அல்லது கட்டாய தாம்பத்தியம் (கற்பழிப்பு) – நாடக காதல் கலைகள் என்று பல விதமான முறையில் காம உணர்ச்சியை தீர்த்து வருகிறான்.
இந்த உணர்ச்சியை தீர்ப்பதில் பெரும்பாலான ஆண்கள்., பெண்களை ஒரு பகடை காயாக பயன்படுத்தி கற்பழிப்பு மற்றும் நாடக காதலால் ஆசைக்கு இணங்க வைத்து பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குதல் மற்றும் திருமணம் முடிக்கப்பட்ட துணைவியுடன் முரட்டுத்தமான தாம்பத்தியம் என்று தன்னுள் எழும் உணர்ச்சியை பெரும்பாலான ஆண்கள் தீர்த்து வருகிறான்.
இதன் விளைவாக சிலர் சுய இன்பம் என்ற பெயரில் பல விதமான முறைகளை தேர்ந்தெடுத்து இன்பம் அடைந்து வருவது., பிறப்புறுப்பில் சில பொருட்களை செலுத்தி சுய இன்பம் காணுவது என்று பல விதமான முறையில் சுய இன்பம் கண்டு., தனது உணர்ச்சியை தீர்த்துக்கொண்டு வருகின்றனர். மேலும்., இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால்., இளம் வயதுள்ள மற்றும் திருமணம் முடியாத நபர்கள் இதனை போன்ற காரியத்தில் ஈடுபடுவது பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
இந்த சுயஇன்பத்திற்க்கு அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக மேலை நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது தான் செக்ஸ் ரோபோட்டுக்கள் எனப்படும் தாம்பத்தியதிற்கான இயந்திரங்கள் அல்லது கருவிகள் ஆகும். இந்த தாம்பத்திய இயந்திரங்களுடன் தாம்பத்தியம் கொள்ளும் பழக்கமானது சீன நாட்டில் அதிகளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தங்களது காமத்தினை போக்குவதற்கு தாம்பத்திய இயந்திரத்தை உபயோகம் செய்து வருகின்றனர். பொதுவாக இயந்திரங்கள் என்றாலே தொழில்நுட்ப கோளாறு மற்றும் பிற கோளாறுகளால் எதிர்பாராத சூழ்நிலையில் செயலிழக்கும் வாய்ப்புகள் மற்றும் சிதையும் வாய்ப்புகள் உள்ளன. மேலும்., இதில் வரும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக மனிதரின் உயிர் பறிபோகவும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஷயம் குறித்து கலவிக்கான மருத்துவர் தெரிவித்தாவது., தாம்பத்திய இயந்திரங்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும் பட்சத்தில்., அந்த இயந்திரத்தால் பல பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பொதுவாக கடைக்கு சென்று இயந்திரத்தை வாங்கும் போது சோதனை செய்து வாங்குவது வழக்கம். தாம்பத்திய பொம்மைகளை பொறுத்த வரையில் அவ்வாறு செய்வதில்லை. இவ்வாறான பொருட்கள் இணையத்தின் மூலமாக வாங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.