புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டபிரபு என்பவர் புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வந்துள்ளார். இவர் மலேசிய நாட்டில் வசித்து வரும் ப்ரியா என்ற திருமணமான பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இந்த பழக்கம் பேஸ்புக் மூலம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகியது இருப்பினும் அவர் மணிகண்டபிரபு காதலித்து வந்துள்ளார். மகனின் முறையற்ற காதலை அறிந்த பெற்றோர் அவரை கண்டித்துள்ளார்.
ஆனாலும், மணிகண்டன் திரும்பிய பாடில்லை இருவரும் நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அதன்படி பிரியா பட்டுக்கோட்டையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி மலேசியாவிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றில் இருந்து வெளியேறிய மணிகண்டபிரபு அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசை நாடியுள்ளனர். அப்பொழுது பிரியா தனது மகனை கடத்தி சென்றுவிட்டதாகவும், அவனை மீட்டுத் தரவேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி இருவரையும் தேடி வருகின்றனர்.