ஓரினச்சேர்க்கை ஏன்அதிகரிக்கின்றது?

மனித வாழ்வில் இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு இருவருக்கும் காதல் ஏற்படுவது இயல்பானது. ஆனாலும் இன்றைய வாழ்க்கைமுறையில் பெண்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு உறவு கொள்கின்றனர். இவர்களின் உறவை லெஸ்பியன் எனவும் கூறுகின்றனர்.

இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், 2 பெண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும் கலாச்சாரமாக மாறிவிட்டது. மேலும் ஓரினச்சேர்க்கைக்கு அங்கீகாரம் வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினர்.

ஆய்வு ஒன்றில் அயல்நாடுகளில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அவர்களுடன் உறவு வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
பெண்ணிடம் பெண் உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படாது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஆண்களின் ஓரினச்சேர்க்கையான உறவிற்கு எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இரு பெண்களுக்கு இடையேயான உறவில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு எனவும் கூறப்பட்டது.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி அதிகமாக பேசப்படுவதில்லை. ஆனாலும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் பிள்ளைகள் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பது பெற்றோர்களின் கடமை என்றும் சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.