சுவையான மட்டன் சுக்கா செய்வது எப்படி..!

அசைவப்பிரியர்களின் பிடித்தமான உணவு மட்டன். இதில் பலவைகை உணவுகள் தயாரிக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்து இழுப்பது மட்டன் சுக்கா. இந்த மட்டன் சுக்கா ஊருக்கு ஊர் செய்முறையில் வித்தியாசப்பட்டாலும் இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாகவே உள்ளது.

இந்த மட்டன் சுக்கா தயாரிப்பது எப்படி எனப் பாப்போம்

மட்டன் சுக்கா செய்யத் தேவையானப் பொருட்கள்:

மட்டன் – 1 கிலோ

சின்ன வெங்காயம் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 2௦௦ கிராம்

தக்காளி – 100 கிராம்

பூண்டு – 50 கிராம்

இஞ்சி – 50 கிராம்

பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ தாளிக்க

சுக்கா மசாலா பொடி – 5 டேபிள்ஸ்பூன்

சுக்கா மசாலா பொடி அரைக்க:

வரமிளகாய் – 30

தனியா – இரண்டு கைப்பிடி

மிளகு – ஒரு கைப்பிடி

சீரகம் – அரைக் கைப்பிடி

காஷ்மீரி மிளகாய் – 5

இவற்றை எண்ணெய் இல்லாமல் வாணலியில் நான்கு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்னர் மிக்சியில் நன்றாக தூள் செய்யவும்.

கருவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

எண்ணெய் – தேவைக்கேற்ப

உப்பு- தேவைக்கேற்ப

இஞ்சி பூண்டு, 10 சின்ன வெங்காயம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

1. கறியை நன்றாக அலசி வைக்கவும்.

2. ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் அனைத்து மசாலா வகையையும் போட்டு நன்கு வதக்கவும்.

3. பொடியாக நறுக்கிய சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

4. இதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

5. பின்னர் இதில் மட்டன் மற்றும் தக்காளி, கருவேப்பிலை மற்றும் 5 டீஸ்பூன் அல்லது உங்கள் காரத்திற்கேற்ப சுக்கா மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் வெள்ளை நிறத்திற்கு மாறியதும், அதில் ஒரு கப் நீர் விட்டு மூடி போட்டு ஐந்து விசில் வைக்கவும்.

6. பின்னர் குக்கரில் வெந்த கறியுடன் கூடிய மாசாலாவை ஒரு பெரிய வாணலியில் அல்லது நான் ஸ்டிக் பானில் போட்டு சுருள வதக்கவும். விருப்பம் இருந்தால் சிறிது நெய் சேர்த்து கொத்தமல்லில் இழை தூவி இறக்கவும்.

7. சுவையான மட்டன் சுக்கா தயார்.