உங்க செல்போனில் அந்த மாதிரி படம் பார்ப்பவரா நீங்கள்.?

தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன்., லேப் டாப், கம்ப்யூட்டர் மூலம் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது தற்போது அதிகரித்துவிட்டது. இதனை பயன்படுத்தி மற்றோரு பக்கம் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நமது தகவல்களை திருடும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.

அப்படி நீங்கள் பார்க்கும் ஆபாசப்பட வலைத்தளங்களில் உங்கள் தகவல்கள் திருடு போக 4 காரணங்கள் உள்ளது. அதில்.,

1. பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.

2. போலியான ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன்லோட்டிங் இருக்கும்.

3. உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

4. முக்கியமான விடயம். நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் மால்வேர். இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக ‘லாக்’ செய்துவிடும், பின்பு அதை ‘அன்லாக்’ செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும். மேலும் உங்கள் தகவல்கள் திருடு போகவும் வாய்ப்புள்ளது. இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வாளைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் கவனமாக இருப்பது நல்லது.