ஆப்பிள் பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான “வைட்டமின் சி” இருப்பதாலும்., உடலுக்குத் தேவையான 14 விழுக்காடு அளவிற்க்கான வைட்டமின்களை வைத்திருப்பதால் தினமும் ஆப்பிள் பழத்தை சாப்பிடுவது நல்லது.
ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் எனப்படும் கொழுப்புகளை கரைக்கக்கூடிய நார்சத்து அதிகமாக இருப்பதால்., உடலுக்கு தேவையற்ற கொழுப்புக்கள் அனைத்தும் கரைக்கப்படும் என்பதால் தினமும் ஆப்பிள் பழத்தை உண்பது நல்லது.
ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தின் மூலமாக மூளைச் செல்களானது அழியாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல்., நரம்பு மண்டலத்தை பாதுகாத்து நமது செயல்பாடுகளை பாதுகாக்கிறது. ஆப்பிள் பழத்தின் சாற்றில் இருந்து எடுக்கப்படும் வினிகர்., மேலை நாடுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் அத்தியாவசிய பொருளாக வைத்திருக்கின்றனர்.
ஆப்பிள் பழத்தை அதிகமாக சாப்பிடும் போது., ஆப்பிள் பழத்தின் உள்ள சத்தின் காரணாமாக கண்புரை நோய் ஏற்படுவதை தவிர்த்தும்., ஏற்பட்டவர்கள் குறைக்கவும் இயலும்.மேலும் தினமும் ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் காரணமாக ஞாபக சக்தி அதிகமாவதோடு மட்டுமல்லாமல்., மூளையில் ஏற்படும் நோய் தாக்கத்தின் அளவை குறைத்து, நோய்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதன் மூலமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராக்கப்படுகிறது.