சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் முருங்கை டீ!

“முருங்கை நொறுங்க தின்னா 3000 வராது” என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி.

இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் உண்ணும் உணவுப்பொருட்களை நன்றாக மென்று நொறுங்க தின்றாலும் மேலும் முருங்கைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலும் 3000 நோய்கள் வராது என்னும் உண்மையாகும்.

முருங்கையின் இலை, ஈர்க்கு, பூ, காய், விதை, வேர், பட்டை, பிசின் ஆகிய எல்லாப்பாகங்களிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

நன்மைகள்
  1. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  2. நீரிழிவு காலத்தில் உதவுகிறது.
  3. எடை குறைப்பில் உதவுகிறது.
  4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  5. தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

முருங்கையை சமைத்து மாத்திரம் இன்றி பானம் தயாரித்தும் பருகலாம்.

முருங்கை டீ
  • முருங்கை இலையினுடைய இலையை உலர்த்தி, பொடி செய்து அதை கிரீன் டீ போல, டீ போட்டுக் குடித்துக் கொள்ளலாம்.
  • ஆனால் இந்த பவுடரை ஒரு நாளைக்கு அரை அல்லது ஒரு ஸ்பூன் அளவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.