கனடா ஒன்ராறியோவில், 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதான சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம், பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே, குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக 33 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.