உறங்கிய பெண்ணருகே நிர்வாண நிலையில் இருந்த ஆண்..!

இந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் நிகழ்வுகளில் பல நம்மை வியப்பிலும்., பல வியக்கத்தக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்த நிலையில்., பிரிட்டிஷ் நாட்டில் நடந்துள்ள சம்பவம் நம்மை ஆச்சரியத்திலும்., வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

பிரிட்டிஷ் நாட்டின் கொலம்பியா நகர் பகுதியில் வசித்து வருபவரின் பெயர் லாரா பகெனலா. இவரும் அதே பகுதியை சார்ந்த பிரெடம் என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில்., இருவரின் காதல் வாழ்க்கையை திருமணத்திற்கு முன்னேற்றி., இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த நிலையில்., கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக எதிர்பாராத விதமாக லாராவின் தலையில் இரும்பு கம்பியொன்று விழுந்துள்ளது.

இதனையடுத்து இவர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர்., அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை அளித்த நிலையில்., தலையில் அடிபட்டதால் பழயதை மறந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கணவரான பிரெடம் நினைவுகளை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில்., இவரது முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திடீரென லாராவிற்கு நினைவு வந்து எழுந்துள்ளார். இந்த சமயத்தில்., இவரின் அருகே லாராவின் கணவர் உடையின்றி படுத்துறங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரா செய்வதறியாது., நான் யார்?., இவர் யார்?., இவர் எதற்காக என்னருகே உடையின்றி படுத்துள்ளார்? என்று குளம்பியுள்ளார். பின்னர் பழைய கால நினைவுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவரவே., பிரெடமை காதலித்து மட்டும் நினைவில் தோன்றியுள்ளது.

இதனையடுத்து இவர் தான் நமது கணவராக வேண்டும் என்று திருமணம் முடித்த தனது காதலனை., மீண்டும் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் தங்களின் வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளதால்., இவர்களின் உறவினர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.