நமது இல்லங்களில் இருக்கும் சமயத்தில் பெற்றோர் நமக்காக இரவு நேரத்தில் பணியை முடித்து விட்டு வரும் சமயத்தில் திராட்சை பழத்தை வாங்கி வருவது வழக்கம். அந்த வகையில்., சிலருக்கு கொட்டை இருக்கும் கருப்பு நிறத்திலான திராட்சைகளை பிடிக்கும். சிலருக்கு பச்சை நிறத்தில் இருக்கும் கொட்டையில்லாத திராட்சைகளை பிடிக்கும்.
அவரவின் விருப்பத்திற்கேற்ப இருக்கும் திராட்சைகளை அதிகளவில் விரும்பி உண்ணுவார்கள். உண்மையில் திராட்சை பழத்தில் பல விதமான திராட்சை பழங்கள் உள்ளது. கருப்பு நிறத்தில் இருக்கும் திராச்சை., பச்சை நிறத்தில் இருக்கும் திராட்சை., பன்னீர் திராட்சை., காஷ்மீர் திராட்சை., காபூல் திராட்சை., ஆங்குர் திராட்சை என்று பல விதமான திராட்சைகள் இருக்கிறது.
திராட்சை பழத்தின் சாறை தினமும் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனையானது குறையும். மேலும்., பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்டிரோஜன் ஹார்மோன் மாற்றத்தை கட்டப்படுத்தும்.
திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பிரச்சனையில் இருந்து எளிதில் விளக்கம் அடையாளம். இதுமட்டுமல்லாது வயிற்றில் புண் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குகிறது.
பெண்கள் கர்ப்பிணிகளாக இருக்கும் சமயத்தில் ஏற்படும் குமட்டல்., வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை எளிதில் தீர்க்கிறது. திராட்சை பழத்தில் இருக்கும் மருத்துவத்தின் மூலமாக இரத்தத்தை சுத்திகரித்து., எடை குறைந்த நபர்களுக்கு நல்ல மருந்தாக இருக்கும்.
திராட்சையில் இருக்கும் ரெஸ்வெரட்டல் என்ற அமிலத்தின் மூலமாக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்கள் அளிக்கப்பட்டு., உடலில் தேவையற்று ஏற்படும் கட்டிகளை குறைகிறது. பசியின்மையால் அவதியடைந்தவர்கள் திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலமாக., அதிகளவு பசியை தூண்டி பசியின்மை பிரச்சனையை சரி செய்கிறது.
அதுமட்டுமல்லாது வயிறு பிரச்சனை மற்றும் குடல் சார்ந்த பிரச்சனையை சரி செய்து நமது உடலை பாதுகாக்கிறது. மேலு, திராட்சை சாறை முகத்தில் கழுவி சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னதாக கழுவி வந்தால் இறந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு முகம் பொலிவு பெரும்.