இந்த ராசிக்காரர்களிடம் காதல் உறவில் இருக்கிறீர்களா?

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்தவகையில் தங்களது காதலில் எப்படி இருப்பார்கள் என பார்ப்போம்.

விருச்சிகம்

தங்களின் ஆழமான உணர்ச்சிகள் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் உறவில் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள். மேலும் தங்கள் உணர்ச்சிகளை எப்படி தங்கள் துணையை கையாளப் பயன்படுத்த வேண்டும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

நீங்கள் விருச்சிக ராசிக்காரரர்களுடன் காதலில் இருந்தால் உங்களால் அவர்கள் அதிக வருத்தத்திற்கு ஆளாவார்கள்.இவர்களிடம் கோபம், பழிவாங்குதல், பொறாமை போன்ற குணங்கள் அதிகம் இருக்கும். இவர்கள் தனக்கான மரியாதையையும், அங்கீகாரத்தையும் எப்போதும் விட்டு கொடுக்க மாட்டார்கள். இவர்களுடன் காதலில் இருப்பது முட்டை மேல் நடப்பது போன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டிய செயலாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எப்பொழுதும் குழப்பமான மனநிலையில் இருக்க காரணம் அவர்களின் சீரற்ற நடத்தையாகும். எந்த உரையாடலின் போதும் இவர்கள்தான் முன்னிலை வகிப்பார்கள். சாதாரண சூழ்நிலையை கூட இவர்கள் சுவாரஸ்யமான சூழ்நிலையாக மாற்றுவார்கள். எனவே பின்னாளில் அதனை பற்றி பேசும்போது அது அதிக சுவாரஸ்யத்தை இவர்களுக்கு வழங்கும்.

இவர்கள் தாங்கள் செய்த சாகசங்கள், செய்த் தவறான செயல்கள் போன்றவற்றை சாதனை போல மற்றவர்களிடம் கூறுவார்கள். இதனால் இவர்களின் துணை கூட எப்பொழுதும் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள். இது அவர்களின் துணையை சவாலுக்கு அழைப்பதை போன்றது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிக உணர்ச்சிவச படக்கூடியவர்கள், இது அவர்களின் சிந்தனை மற்றும் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் பழிவாங்க விரும்பமாட்டார்கள் ஆனால் மனதில் எப்பொழுதும் கோபத்துடன்தான் இருப்பார்கள் இதனால் சிலசமயம் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படக்கூடும்.

இவர்கள் மற்றவர்களிடமிருந்து ஒப்புதல், சரிபார்த்தல், ஏற்றுக்கொள்வது மற்றும் பாராட்டுக்களை எதிர்பார்க்கிறார்கள்.

அவர்கள் தங்களின் சுயமதிப்பையோ அல்லது சொந்த் திறன்களையோ நம்பமாட்டார்கள். இதனாலேயே இவர்கள் தங்கள் துணையை படுத்தி எடுத்துவிடுவார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் குழப்பமான மனநிலையுடன் இருக்க காரணம் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் மனநிலை மாற்றங்கள்தான். ஒருசமயம் வேடிக்கையானவர்களாகவும், மகிழ்ச்சியாகவும் காணப்படும் இவர்கள், உடனே சோகமாகவும், விரக்தியாகவும் காணப்படுவார்கள்.

அடிக்கடி மாறும் இவர்களின் மனநிலை இவர்களின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்காது. இவர்கள் எப்பொழுதும் மோதலுக்கு தயாராக இருப்பார்கள், சொல்வதற்கு ஏதேனும் எதிர்மறையான விஷயங்கள் இவர்கள் மனதில் இருந்தால் அதனை சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

ஆனால் இவர்களின் துணைக்கு இருக்கும் ஒரே அதிர்ஷ்டம் இவர்களின் மோசமான மனநிலை நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என்பதுதான்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் அதீத சுதந்திரத்தை விரும்புபவர்கள், இவர்கள் காதலில் இருக்கும்போது தங்கள் துணையிடம் அதிக கோரிக்கைகளை வைத்துக்கொண்டே இருப்பார்கள். தங்கள் துணை தனக்கு எப்பொழுதும் ஆதரவாகவும், புரிந்து கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

சிலசமயம் பொறுப்பை எடுத்துக் கொள்வதில் இவர்கள் அதிக தயக்கம் காட்டுவார்கள். இவர்களின் நடத்தைகள் சிலசமயம் முட்டாள்தனமானதாக இருக்கும்.

மற்றவர்கள் தங்கள் மீது குற்றம் சொல்வதையோ அல்லது குறை கூறுவதையோ இவர்கள் விரும்ப மாட்டார்கள்.

மற்றவர்களிடம் தனக்கு இருக்கும் எல்லை என்ன என்பதை இவர்கள் உணரமாட்டார்கள்.