கவின் வனிதா இடையே சண்டை! தர்ஷனுக்காக பேசியது குற்றமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக நுழைந்துள்ள வனிதா விஜயகுமார் நாள்தோறும் ஏதாவது புதிய பிரச்னையை பிக்பாஸ் வீட்டில் ஏற்படுத்தி வருகிறார்.

இன்று நாமினேஷன் நடந்த நிலையில், அதில் கவின் பேசும்போது தர்ஷன் உள்ளிட்டவர்கள் வாழ்வா சாவா நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் ஜெயிக்கவேண்டும் என கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வனிதாவாக்குவாதத்தில் இறங்கினார். யார் ஜெயிக்கவேண்டும் என பிரச்சாரம் செய்யவா நீ வீட்டுக்குள் வந்தாய்?, அவன் விளையாடி ஜெயிக்கட்டும், இங்கு அழுது ட்ராமா பண்ணிட்டு இருக்காதீங்க என கூறினார். கவினுக்கு ஆதரகவாக லாஸ்லியாவும் சண்டை போட்டார்.

“இதற்காக நான் வெளியே போனாலும் பரவாயில்லை. நான் இதைத்தான் செய்வேன்” என கவின் வனிதாவிடம் தன் கருத்தை கூறியுள்ளார்.