கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி என்பவருக்கு ரேவதி என்ற 33 வயது மனைவி இருக்கின்றார். சில நாட்களாக ரேவதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக உணர்ந்த ஜோதி தனது மாமனாரிடம் சென்று தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த ரேவதியின் தந்தை, ரேவதியை அங்கிருந்து வெளியூருக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் ரேவதி பிணமாக கிடந்துள்ளார். கிராம மக்களிடம் ரேவதி திடீரென இறந்துவிட்டார் என கூறியுள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர், போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், அவரின் தந்தை கண்ணனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது மகளை அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.
ரேவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனை கண்ணன் தட்டிக்கேட்க வெளியூருக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார். அப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த கண்ணன் ரேவதி அடிக்க அவர் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.