நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக தினம்தோறும் காலையில் எழுந்தவுடன்., தேநீர் மற்றும் கோட்டை வடியிலை நீர் அருந்துவது வழக்கமான ஒன்றாகும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட்டால்., நமது உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது குறித்து இனி காண்போம்.
தினமும் காலையில் எழுந்தவுடன் பொதுவாக பழங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தலாம். இதன் மூலமாக உடலின் சக்தி அதிகரித்து., சருமமானது அதிகளவு பொலிவு பெறுகிறது. தினம்தோறும் காலையில் எழுந்தவுடன் கிவி பழம்., ஆப்பிள் பழம்., தர்பூசணி பழம்., ஸ்டாபேரி மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டும்.
மேலும்., வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றை காலையில் சாப்பிட கூடாது. தினமும் காலையில் இளம் சூடுள்ள நீரை குடிப்பதன் மூலமாக உடல் எடையானது அதிகமாக இருந்தால் கட்டுக்குள் வரும். உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேறும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
நமது சருமமும் இளமையாகி., உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடலின் செரிமான சக்தி அதிகரித்து., மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். தினமும் இளம் சூடுள்ள நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்., உடலின் பலம் அதிகரிக்கும். சளி மற்றும் இருமல் தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
இளம் சூடுள்ள நீரில் தேன் கலந்து குடித்து வருவதால் குரலும் மென்மையாகி., இரத்தத்தினை சுத்தம் செய்யும். உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி., வயிற்றில் ஏற்படும் எரிச்சல் பிரச்சனையை குறைக்கும். செரிமானத்திற்கும் நல்ல வழிவகை செய்யும். எந்த நேரமும் தூக்க கலக்கம் இருந்தால்., அதனை சரியாக்கும்.
தினமும் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால்., குளிர்ச்சி கிடைக்கும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இதனைப்போன்று சீராக தண்ணீரையும் அருந்தி வரலாம். மேலும்., முளைகட்டிய பயிரை உண்டு வந்தால்., வைட்டமின் சத்துக்கள்., தாது உப்புகள்., புரோட்டின்கள் மற்றும் என்சைம்ஸ்., ஆண்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் உள்ளது.