முடி உதிர்வதை தடுக்க:
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து அதை மீண்டும் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் தலை முடி கொட்டுவது நீங்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்
முடி உதிர்வது நிற்க:
தான்றிக்காய் நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்
தலையில் கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம் 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வேண்டும் தலை முடி கருமை அதிகமாகும்