உங்கள் ராசிப்படி உங்களின் காதல் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா ??

அனைவரின் வாழ்க்கையிலும் காதல் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதேசமயம் காதல் மிகவும் தந்திரமான ஒன்றாகும். அனைவருக்குமே வாழ்க்கையில் ஒரு காதல் நிச்சயம் இருக்கும். அப்படி இல்லையெனில் அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆனால் நமக்கான உணமையான காதல் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது.

நமக்கு காதல் வராமல் இருக்கவோ அல்லது கிடைக்காமல் இருக்கவோ நம்மிடம் இருக்கும் சில குணங்கள்தான் காரணமாக இருக்கும். அவை என்னவென்று ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் கண்டறிந்து விடலாம். உண்மைதான் ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்கள் ராசியின் அடிப்படையில் உங்களை காதலில் விழாமல் அல்லது காதலை பெறாமல் தடுக்கும் குணம் என்று கூற முடியும். இந்த பதிவில் உங்களுக்கு காதல் அமையாமல் தடுக்கும் உங்களின் குணம் என்னவென்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் காதலை நீண்ட காலம் தக்க வைக்க போராடுவார்கள். ஏனெனில் இவர்கள் விரைவில் காதலை விட்டு வெளியேறிவிடுவார்கள். இவர்களுக்கு இருக்கும் பிரச்சினை என்னவென்றால் தங்களின் நிலையான காதலுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்று இவர்கள் அறிந்தாலும், தங்கள் இதயத்தை உடைக்கும் ஒருவரையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்பதுதான்.

ரிஷபம்

தன்னுடைய காதல் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், தங்களின் வாழ்க்கைத்துணை எப்படி இருக்க வேண்டும் என்று இவர்களின் மூளைக்குள் ஒரு கற்பனை இருக்கும். இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற துணை கிடைக்கும் வரை இவர்கள் காதலில் குதிக்க மாட்டார்கள். வாழ்க்கையில் சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதை இவர்கள் உணர வேண்டியது அவசியம்.

மிதுனம்

உங்களின் நகைச்சுவை உணர்வையும், புத்திக்கூர்மையையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் என்று நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். ஆனால் உங்களின் ஆழ்மனதில் இருக்கும் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் வெளிப்படுத்துவதற்கு இவர்கள் அதிக சிரமப்படுவார்கள். உங்களின் ஆசைகள் நியாயனமானதாக இருந்தால் அதனை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் மிகவும் அன்பானவர்கள் அதேசமயம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், ஆனால் இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே இவர்கள் தங்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் மீது காதலில் விழுவதுதான். இதனால் அவர்கள் காதல் முறியும்போது அது அவர்களை அதிகம் பாதிக்கும், ஏனெனில் இவர்களின் காதல் முறிவு அவ்வளவு சுமூகமாக இருக்காது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பை உணருகிறார்கள். ஒருவேளை தங்கள் உறவில் விஷயங்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும்போது இவர்கள் அந்த உறவை விட்டு வெளியேறுவார்கள். இவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில் காதலில் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் ஒருபோதும் வைத்துக்கொள்ள முடியாது.

கன்னி

வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களையும் போலவே, கன்னி ராசிக்காரர்கள் காதலிலும் முழுமையைத் தேடுகிறார்கள். பர்பெக்ட் மனிதர்கள் என்பவர்கள் இல்லவே இல்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களின் எதிர்பார்ப்புகளை ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல இல்லையென்று உடனடியாக ஒருவரை நிராகரிக்க வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே சுதந்திரத்தை விரும்புகிறவர்கள், தாங்கள் விரும்பியதை செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இதனால் நீங்கள் மற்றவர்கள் மீது ஆர்வம் காட்டுவதில்லை என்று பிறரை நினைக்கத் தூண்டும். உங்களைப் போலவே சிந்திக்கும் துணைதான் வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் உறவின் ஆரம்ப காலக்கட்டத்தில் மிகவும் வலிமையாக இருக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். உங்களின் ஆழமான உணர்ச்சிகளால் ஊன்கள் துணையை மூழ்கடித்து விட வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். உங்கள் காதல் வாழ்க்கை சீராக நகரத் தொடங்கியதும் அதனை மேம்படுத்திக் கொள்ள உங்கள் உணர்ச்சிகளையும், ஆசைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை அவர்களின் அடிக்கடி மாறும் மனநிலைதான். இருவருக்கும் சேர்த்து இவர்களே காதலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருசமயம் இவர்கள் பின்னால் செல்வார்கள், அடுத்த நிமிடமே தங்கள் பின்னால் துணை வர வேண்டும் என்று நினைப்பார்கள். இது இவர்களின் துணைக்கு அயர்ச்சியை ஏற்படுத்தும்.

மகரம்

இவர்கள் எப்போதாவதுதான் தங்களின் வேடிக்கையான பக்கத்தை மற்றவர்களுக்கு காட்டுவார்கள். ஏனெனில் இவர்கள் எப்பொழுதும் தங்களை இறுக்கமாக வைத்துக் கொள்வார்கள். மற்றவர்களிடம் நெருங்கி பழக இவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும். அனைவரிடமும் இப்படி இருப்பது பரவாயில்லை, ஆனால் தங்கள் துணையிடமாவது இவர்கள் இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அனைத்திற்கும் உணர்ச்சிசவசப்படுவதில் இருந்தும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் இருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இதனால் வாழ்க்கையின் பல மகிழ்ச்சியான தருணங்களை இழக்கிறார்கள். இதற்கு முன் நீங்கள் அனுபவிக்காத உலகத்தின் இன்பங்களை ஏற்றுக்கொள்ள எப்பொழுதும் தயாராக இருங்கள்.

மீனம்

மீன ராசியை பொறுத்த வரையில் அவர்களுக்கு தங்களுக்கானவர் பற்றிய ஒரு பார்வை உள்ளது. இவர்களின் மனதில் அவர்களை கண்டறிவதற்கென ஒரு தனி யோசனை இருக்கும், அந்த சரியான துணைக்காக எவ்வளவு காலம் வேண்டுமென்றாலும் காத்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு ஒருவர் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக உங்கள் இனிமையான காலத்தை வீணடிக்காதீர்கள்.