ஆண்களின் உலகம் பெண்களின் உலகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனால் தான் என்னவோ, ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதில் கடும் சவால்களை சந்திக்கிறார்கள். அதிலும் குறிப்பாக கணவர்கள். இங்கு கணவர், மனைவியிடம் கேட்க விரும்பும் 10 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.!
1 வெளியே கிளம்புவதற்கு தயாராக ஏன் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறாய் ?
பல நேரங்களில் நமது அப்பாவோ, அண்ணனோ, காதலனோ அல்லது கணவரோ கேட்கும் கேள்வி இது. குறிப்பாக பல கணவர்கள் குழம்பி தவிக்கும் விஷயம் இது. ஆம், பெண்கள் தயாராக நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், பெண்களால் ஆண்களை போல் 5 நிமிடங்களில் தயாராகி விட முடியாது. அழகாக தோன்றுவது பெண்களின் சுய மரியாதையை அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் ஆண்களுக்காகவும் பெண்கள் அழகாய் தோன்ற நினைப்பார்கள். அதனால் தான் தங்களை அழகுபடுத்திக்கொள்ள அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
2 உங்கள் குறிப்புகளை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?
பெண்கள் பல விஷயங்களை நேரடியாக சொல்ல தயங்கி சில குறிப்புக்கள் மூலம் உணர்த்துவார்கள். பல ஆண்கள் இதை புரிந்துகொள்ள தடுமாறுகிறார்கள். பெண்கள் தங்கள் தேவையை வெளியே சொல்ல தயங்குவது, ஏனென்றால் அவர்களை நீங்கள் தவறாக எண்ணி விடுவீர்கள் என்ற எண்ணமே. அதனால் ரகசியமாக பெண்கள் கொடுக்கும் குறிப்புகளை நீங்கள் புரிந்து கொண்டு நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இது ஒத்துவராது எனில் நீங்கள் மனம்விட்டு பேசி ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்களின் இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும்.
3 ஏன் என்னிடம் மட்டும் கோபப்படுகிறாய்?
பெண்கள் பொது இடங்களில் சாந்தமாக இருப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் சில நேரங்களில் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தங்கள் கணவரிடம் கத்திவிடுவார்கள். இதனால் பல ஆண்கள் ஏன் தன் மனைவி தன்னிடம் மட்டும் கோபத்தை காட்டுகிறாள் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மேல் அன்பு உள்ளதால் தான், காதல் உள்ளதால் தான் பெண்கள் கோபப்படுகிறார்கள். மனைவி எவ்வளவு தான் கோபப்பட்டாலும் கணவனுக்கு அவள் மீது உள்ள காதல் குறையாது என்ற நம்பிக்கையிலேயே பெண் அவ்வாறு நடந்துகொள்கிறாள். பல நேரங்களில் பெண்களின் கோபத்திற்கு வெளி மனிதர்கள் தான் காரணம் என்றாலும் சில நேரங்களில் கணவர் கூட காரணமாக இருக்கலாம்.
4 உனக்கு இவ்வளவு காலணிகள் தேவையா?
ஆம் தேவை தான் என்பதே இதற்கான பதிலாகும். பெண்களுக்கு உடைக்கு தகுந்த காலணிகள் அணிவது மிகவும் பிடித்தமான செயல். இது அவர்களுக்கு மகிழிச்சியூட்டும்.
5 ஆணுறுப்பு பற்றிய கேள்விகள்?
பெரும்பாலான ஆண்கள் மனைவிகளிடம் வெளிப்படையாக கேட்க தயங்குவது இது. தங்களின் ஆண்குறியின் அளவை பற்றி கவலைப்படாத ஆண்களே இல்லை எனலாம். தங்களால் துணையை திருப்பதி படுத்த முடிகிறதா என்று குழம்பிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், உண்மை என்னவெனில் ஆண்குறிக்கும் தாம்பத்தியத்தில் திருப்தியடைவதற்கும் சம்பந்தமே இல்லை.
6 படுக்கையில் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட விருப்பம் உள்ளதா?
இது பல ஆண்கள் கேட்க தயங்கும் விஷயம். ஆனால் உண்மை என்னவென்றால், தன் விருப்பத்தை கேட்கும் ஆணை பெண்ணிற்கு மிகவும் பிடிக்கும். பெண்களுக்குள்ளும் சில ஆசைகள் இருக்கும். அதை அவர்கள் வெளியே சொல்ல தயங்குவார்கள். அதனால் ஆண்களே கூச்சப்படாமல் உங்கள் மனைவியிடம் அவர் மனதில் உள்ள ஆசையை கேளுங்கள். உங்களுக்கு ஆச்சரியமளிக்கும் பதில் கூட கிடைக்கலாம்.
7 நான் உன்னை எவ்வளவு ரசிக்கிறேன் என்று தெரியுமா?
பல நேரங்களில் பெண்கள் ஆண்கள் தரும் பாராட்டுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். நீ இன்று மிகவும் அழகாக இருக்கிறாய் என்று ஆண்கள் பாராட்டினால், அப்போது மற்ற நாட்களில் நான் அழகாக இல்லையா என்று எதிர் கேள்வி கேட்பார்கள். சில நேரங்களில் இது கேலியாக இருந்தாலும் பல நேரங்களில் பெண்கள் தங்கள் ஐயத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு செய்வார்கள். ஏனெனில் எந்த வித அழகு சாதன பொருளை பயன்படுத்தாமல் தன் கணவனுக்கு தான் அழகாய் தெரிய வேண்டும் என்று ஒரு மனைவி நினைப்பாள்.
8 நம் அந்தரங்க விஷயத்தை பிறரிடம் ஏன் பகிர்ந்து கொள்கிறாய்?
பல பெண்கள் தங்கள் அந்தரங்க விஷயத்தை தங்கள் சகோதரிகளிடம் அல்லது தோழிகளிடம் பகிர்ந்துகொள்வார்கள். இதில் கவலை கொள்ள எதுவும் இல்லை. பெண்களுக்கு தங்கள் மனதில் உள்ள விஷயத்தை தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள தோன்றும். உங்களை தாழ்த்தியோ குறைவாக மதிப்பீடு செய்தோ பிறரிடம் பேச மாட்டார்கள்.
9 நீங்கள் உணவு கட்டுப்பாடு முறையை பின்பற்றும் போது, ஏன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அதே உணவை கொடுக்குறீர்கள்?
நம்மில் நிறைய பேர் உடல் எடையை குறைக்க உணவு முறையில் சில மாற்றங்கள் செய்து உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். இது சுலபமானதும் அல்ல. கணவருக்கும் குழந்தைகளுக்கும் அதே உணவை கொடுப்பதால் இது சுலபமானதாக மாறிவிடாது. ஆனால் கணவரும் குழந்தைகளும் இதை சாப்பிட்டால் பெண்களுக்கு சற்றே ஆறுதலாக இருக்கும். அது மட்டுமல்ல அவர்களுக்கு வீட்டில் ஆதரவு இருப்பதை எண்ணி மகிழ்வார்கள். சில நேரங்களில் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் பெண்கள் உணவு முறை மாற்றங்களை செய்வார்கள். அதனால் அவர்களின் ஆசையை தூண்டும் உணவுகளை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்.
10 நண்பர்களுடன் வெளியே சுற்றுவதால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா?
பல பெண்கள் இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால் சில வேளைகளில் பெண்கள் தங்களிடம் குறை உள்ளதால் தான் ஆண்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுகிறார்கள் என்று நினைப்பார்கள். நீங்கள் அந்த எண்ணத்தில் வெளியே செல்லவில்லை என்றாலும் பெண்களின் மனது அப்படி தான் நினைக்கும். எனவே உங்கள் மனைவிக்கு நீங்கள் நம்பிக்கையளிக்க வேண்டும். அதாவது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது அவர்களுடன் சிறிது நேரம் செலவழிக்கவே அன்றி உங்கள் மனைவியிடம் குறைகள் ஏதும் இல்லை என்று கூறுங்கள். காதலுடன் எதை சொன்னாலும் பெண்கள் ஏற்றுக்கொள்வார்கள்.