தயிருக்கு இத்தனை மருத்துவ குணங்களா??

இன்றுள்ள நிலையில் நாம் நமது உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும். அவ்வாறு நாம் சாப்பிடும் உணவுகளில் பெரும்பாலும் இடத்தை தக்கவைக்கும் உணவாக தயிர் சார்ந்த உணவுகள் இருக்கிறது. தயிரை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

தயிரை சாப்பிடுவதால் அதிகளவு வயிற்றுப்போக்கு பிரச்சனை சரியாகும். வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயத்தில் வெந்தயம் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால் வயிறு பெருமல் பிரச்சனை சரியாகும். இல்லங்களில் மற்றும் கடைகளில் சமைக்கும் பிரியாணி மற்றும் அசைவ வகை உணவுகள் வயிற்று கேடுகள் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு வெங்காயம் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிடுகிறோம்.

பெண்கள் தங்களின் மாதவிடாய் சுழற்சி முடிவு காலத்தை எட்டும் சமயத்தில் உடலுக்கு தேவையான கால்சியத்தை வழங்கி உடல் நலத்தை பாதுகாக்கிறது. வெண்ணெய்யை நன்றாக காய்ச்சி இறக்கும் சமயத்தில் சிறிதளவு தயிரை சேர்த்தால் நெய் நல்ல வாசனையுடன் இருக்கும். சிறிதளவு புளித்த தயிரை தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடியானது மிருதுவாக இருக்கும்.

இரண்டு முதல் மூன்று நாட்கள் தயிர் புளிக்காமல் இருப்பதற்கு தேங்காயை தயிருடன் சேர்த்தால் தயிர் எளிதில் புளிக்காது. குழம்பு வைப்பதற்கு வெண்டைக்காயை வதக்கும் சமயத்தில் சிறிதளவு தயிரை சேர்த்தால் வெண்டைக்காயின் நிறம் மாறாது. வாழைப்பூ மற்றும் வாழை தண்டு நிறம் மாறாமல் இருப்பதற்கு தயிருடன் நீரை சேர்த்து அதில் வாழை தண்டை போட்டு வைக்கலாம்.

மண்ணெண்ணையை உபயோகம் செய்து விட்டு மண்ணெண்ணையின் வாசனை கைகளை விட்டு நீங்குவதற்கு தயிரை கைகளில் தேய்த்து கழுவினால் மண்ணெண்ணையின் வாசனையானது நீங்கும். தயிருடன் உப்பு., கொத்தமல்லி., கறிவேப்பில்லை., பெருங்காயம் சேர்த்து நன்றாக கடைந்து மோராக குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.