இஞ்சியின் மருத்துவகுணங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே., உடலுக்கு தொல்லைகளாக இருக்கும் பல விதமான பிரச்சனைகளை சரி செய்து வருகிறது. மேலும்., அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம் மற்றும் இருமலை குணப்படுத்தும் மகத்துவமான ஆற்றலை கொண்டது. இதுமட்டுமல்லாமல் வாந்தி மற்றும் குமட்டலுக்கான சிறந்த மருந்தாக உபயோகம் செய்யப்பட்டு வருகிறது.
அல்சர் பிரச்சனை மற்றும் சிறுகுடல் பாதிப்பு இருக்கும் நபர்கள் அடிக்கடி இஞ்சி தேநீரை குடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அதிகளவில் இஞ்சி தேநீரை அருந்தும் நபர்கள் நாக்கில் எரிச்சல்., அரிப்பு., வாய்ப்புண் மற்றும் வயிறு எரிச்சலால் அவதியுற வேண்டியிருக்கும்.
இஞ்சி தேநீரில் இருக்கும் அமிலத்தன்மையின் காரணமாக நெஞ்சு எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
அறுவை சிகிச்சை மூலமாக குழந்தைகளை பெற்ற பெண்கள் மற்றும் பலவீனமான கர்ப்பிணி பெண்கள் அதிகளவு இஞ்சி தேநீரை உட்கொள்ளும் போது உத்தரப்போக்கானது அதிகமாகிவிடும்.
ஆங்கில மருந்துகள் மூலமாக காய்ச்சல் மற்றும் சில இதர பிரச்சனைகளுக்கு மருந்துகளை உட்கொள்ளும் போது., இஞ்சி தேநீரை உட்கொள்வது மிகப்பெரிய பக்கவிளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.