தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் காமெடியனாக யோகி பாபு வலம் வருகிறார். அவர் இல்லாத படங்கள் இல்லை எனலாம். அஜித், விஜய் என பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் அவர் ஹீரோவாக கூர்க்கா, தர்மபிரபு படத்தில் நடித்திருந்தார்.
தீபாவளிக்கு வரப்போகும் பிகில் படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது அவரும் கருணாகரணும் இணைந்து காமெடி கலந்த சயின்ஸ் ஃபிக்ஷன், திரில்லர் கதையில் நடிக்கிறார்கள்.
ட்ரிப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை டார்லிங், 100 படத்தின் இயக்குனர் சாம் ஆண்டனின் உதவி இயக்குனர் டென்னிஸ் இயக்குகிறாராம். சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் புகழ் சித்து குமார் இசைமைக்கிறாராம். ஹீரோயினாக சுனைனா நடிக்கிறாராம்.