ஆரம்பத்தில் ஒருவர் அமரும் நிலையை வைத்து அவரை பற்றி அறிந்துக் கொள்ள முடியுமா? என நீங்கள் கேட்கலாம். ஆனால், அறிந்துக்கொள்ளலாம் என்பதே உண்மை.
கர்வமான உணர்வு கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். எளிமையான குணம் கொண்டவர்கள் சில நிலையில் தான் அமர்வார்கள். இப்படி சுயநலம் கொண்டவர்கள், வெகுளி, பயந்த சுபாவம் கொண்டவர்கள், அனைவருடனும் இணைந்து இனிமையாக பழகுபவர்கள் என ஒவ்வொரு நபரும் ஒரு சில நிலைகளில் அமரும் பழக்கம் கொண்டவர்கள்.
காலை மடக்கி
தரை அல்லது நாற்காலியில் காலை மடக்கி உட்காரும் நபர்கள் திறந்த மனம் மற்றும் கவலையற்ற நபர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனம் மற்றும் உடல் ரீதியான வேலைகளில் புது கருத்துக்கள் கொண்டிருப்பார்கள்.
மேலும், இவர்கள் எந்த ஒரு நிலையிலும் வளைந்துக் கொடுத்து அதற்கு ஏற்ப நடந்துக் கொள்வார்கள். மன ரீதியாக இவர்கள் வலிமையாக காணப்படுவார்கள்.
நேராக அமருதல்
இண்டர்வ்யூ செல்லும் போது மக்கள் இப்படி தான் நேராக நன்கு அமர்ந்திருப்பார்கள். ஆனால், ஒருசிலர் மட்டுமே எங்கேயும், எப்போதும் இதே மாதிரி நேராக அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.
இயல்பாக இந்த நிலையில் அமரும் நபர்கள் வலிமையானவர்களாக, நம்பக தன்மை கொண்டவர்களாக, எதற்கும் உறுதுணையாக இருப்பவர்களாக விளங்குவார்கள்.
எந்த ஒரு புதிய அனுபவத்தை கற்பதிலும் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கூச்சப்பட்டு ஒதுங்காமல் முன்வந்து தங்களை ஈடுப்படுத்திக் கொள்வார்கள்.
சாய்ந்து
அதாவது தங்கள் கைகளை பயன்படுத்தி அதன் உதவியோடு சாய்ந்து உட்காரும் பழக்கம் உள்ளவர்கள், அனைத்தையும் உற்று நோக்கி உள்வாங்கிக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள். எந்த சூழல் நிலையையும் பார்த்தே அறிந்து எடைப் போட்டு விடுவார்கள். இவர்கள் மற்றவர்கள் உணர்வுகளை நன்கு புரிந்துக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பார்கள்.
குறுக்கு கால்
உட்காரும் போது கால்களை ஒன்றுடன் ஒன்று குறுக்கே போட்டு அமரும் பழக்கம் உடையவர்க நேர்த்தியான, நியாயமான குணம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் பண்பாக நடந்துக் கொள்வார்கள். இவர்களிடம் புதிய சிந்தனைகள், யோசனைகள் பிறக்கும். இவர்கள் எளிதாக புதிய நபர்களுடன் பழகுவார்கள். இந்த அமரும் நிலை இவர்கள் புதிய அனுபவத்தை விரும்பும் நபர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இருக்கையை பிடித்தவாறு
சிலர் நாற்காலி, சோபாக்களில் அமரும் போது அந்த கைப்பிடியை பிடித்துக் கொண்டே அமர்ந்திருப்பார்கள். இவர்கள் மற்ற நபர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், அவர்கள் நல்வாழ்க்கைக்காக உதவுவதிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மன மற்றும் உடல் ரீதியாக மற்றவர்கள் சந்தோஷத்திற்காக உழைக்க கூடியவர்கள். இவர்களது நண்பர்கள் இவர்களை சார்ந்து இருப்பார்கள்.
கைகட்டி
வலிமை மற்றும் நம்பிக்கையுடன்… இவர்களிடம் தற்காப்பு தன்மையும் காணலாம். இவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வார்கள். மேலும், மற்றவர்களை காக்கவும் முற்படுவார்கள். இவர்கள் எந்த ஒரு நபரையும் மற்றும் சூழலையும் உன்னிப்பாக கண்காணித்து, ஆராயும் குணம் கொண்டிருப்பார்கள்.
ஒருபுறமாக.
பெரும்பாலும் பெண்களிடம் இந்த அமரும் நிலையை காண முடியும். கால்களை ஒருபுறமாக நீட்டி, மறுபுறம் சாய்ந்து அமரும் நிலை. இவர்கள் இயற்கையாகவே இனிமையானவர்கள், மென்மையான மற்றும் அக்கறை எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். எந்த ஒரு சவாலையும் தங்களுடன் நபர்களை இணைத்துக் கொண்டு போராடும் குணம் கொண்டவர்கள். புதிய அனுபவங்களை விரும்புவார்கள்.
தொடையில்.
தொடையில் கைகளை வைத்து அமரும் நிலை. இவர்கள் கூச்ச சுபாவம் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் புதிய அனுபவம் பெரும் ஆர்வம் இருக்காது. பெரும்பாலும் தனியாக தான் இருப்பார்கள். இவர்கள் மென்மையான மனம் மற்றும் கருணை உள்ளம் கொண்டிருந்தாலும் புதிய விஷயங்களில் ஈடுபட தயங்குவார்கள். மற்றவர்கள் கருத்து, உணர்வுகளோடு இவர்கள் ஒத்துப் போவது கடினம்.
மண்டியிட்டு.
இருப்பதிலேயே கடினமான அமரும் நிலை இதுதான். இவர்கள் மரியாதை அளிக்கும் குணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் மக்களிடம் இருந்து மரியாதை எதிர்பார்க்கும் குணமும் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் தலைமை பண்பு, மரியாதை மற்றும் மற்றவர்கள் மீது கருணை எண்ணம் இருக்கும்.
நடுவே அமருவோர்.
சோபா, பார்க் பென்ச் போன்ற இருக்கை வகையில் நடுவே அமரும் பழக்கம் கொண்டிருக்கும் நபர்கள்… உயர்வான நம்பிக்கை கொண்டிருப்பர்கள். வாழ்வில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். பொதுவாக அனைவரும் ஒரு முடிவு எடுக்க நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், தங்களுக்கு எது வேண்டும் என்று நன்கு அறிந்த இவர்கள் எந்த முடிவாக இருந்தாலும் சீக்கிரம் எடுத்துவிடுவார்கள். வாழ்க்கை மீதான எண்ணங்கள் மற்றும் இலட்சியங்கள் மீது தெளிவாக இருப்பார்கள்.
காலாட்டிக் கொண்டே.
கால் மீது கால் போட்டு சிலர் உட்கார்வார்கள். அதிலும் சிலர் காலை ஆட்டிக் கொண்டே அமரும் பழக்கம் கொண்டிருப்பார்கள். இவர்கள் எதையும் திட்டம் போட்டு செய்வார்கள். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். நேரம் தவறாமல் வேலை செய்வார்கள். மற்றவர்கள் சந்தோஷத்தை முக்கியமாக பார்ப்பார்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதென்பது இவர்களுக்கு பிடித்த செயல். மக்களிடம் இருந்து எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.
கைகளை இணைத்து.
கால்கள் மீது கைகளை இணைத்து வைத்து அமரும் பழக்கும் நபர்கள், அமைதியானவர்கள், பொறுமையாக இருக்க கூடியவர்கள். குறிப்பட்ட மக்களுடன் நன்கு பழகுவார்கள். அனைவருடனும் சேர்ந்து வாழ்வதென்பது இவர்களுக்கு கொஞ்சம் கடினம். மென்மையாக பேசும் குணம் கொண்டிருப்பார்கள். யார் மனதும் புண்பட பேசிவிட கூடாது என்பது கவனமாக இருப்பார்கள்.
கை கோர்த்து
இரண்டு கைகளையும் கோர்த்து அமரும் பழக்கம் கொண்ட இவர்கள் தங்கள் இலட்சியங்கள் குறித்த பேரார்வம் மற்றும் உணர்ச்சிப் பூர்வமானவர்கள். இவர்கள் மல்டி டாஸ்கிங் செய்ய முடியாதவர்கள். தங்கள் மொத்த எனர்ஜியையும் ஒரே செயலில், ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களுடன் இணைந்து பழக விருப்பம் கொண்டிருந்தாலும், தனித்தே வேலை செய்வார்கள்.
கால்கள் விரித்து
இவர்கள் அசாதாரண வாழ்க்கையை விரும்புபவர்கள். ஆனாலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் மட்டுமே இவர்களால் கவனம் செலுத்த முடியும். புதிய நபர்களுடன் பழக நிறைய ஆர்வம் கொண்டிருப்பார்கள். எப்போதுமே புதிய அனுபவங்களை கற்கும் நபர்களாக இருப்பார்கள். எளிமையான வழியை காட்டிலும் கடினமான வழியை தேர்வு செய்வார்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள துணிந்து பயணிப்பார்கள்.
கைகளை குறுக்கே வைத்து.
கால் மேல் கால் போட்டு உட்கார்வதை போல. இவர்கள் அமரும் போது ஒரு கை மீது மற்றொரு கையை குறுக்கே வைத்தவாறு அமர்திருப்பார்கள். இவர்கள் பிற நபர்கள் உடன் பாதுகாப்பின்மை மற்றும் அசௌகையரியமான எண்ணம் கொண்டிருப்பர்கள்.
தங்களுக்கு தாங்களே என சுயம் சார்ந்த மகிழ்ச்சி கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடன் பழகுவதை கொஞ்சம் தவிர்ப்பார்கள். யாரையும் எளிதாக நம்பமாட்டார்கள். எந்த விஷயத்திற்கும் அதிகமாக ரியாக்ட் செய்வார்கள்.