இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் இவர் கேப்டனாக இருந்த இரண்டு முறையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால் 2020 ஐபிஎல் சீசனில் அஸ்வினை வெளியேற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், கேஎல் ராகுலை அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் எனத் தெரிகிறது. அஸ்வினை வாங்க டெல்லி அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் அஸ்வினை வாங்கும் போட்டியில் களம் இறங்கலாம் எனக்கூறப்படுகிறது.