உங்கள் மகிழ்ச்சிக்கு கொஞ்சம் சிரிங்க பாஸ்.!

சிவா : மசால் தோசை, மைசூர் போண்டா எல்லாம் சாப்பிட கூடாதுன்னு சொன்னது உடல் நலத்துக்காகத்தானே டாக்டர்?
டாக்டர் : ஆமாம். இதுல என்ன சந்தேகம்?
சிவா : பொறாமையில சொல்லலியே?
டாக்டர் : ??

அருண் : எ‌ன் பொ‌ண்டா‌ட்டிய எ‌ன்ன தா‌ன் செ‌ய்றது?
தீபக் : ஏ‌ன்? எ‌ன்ன ப‌ண்றா‌ங்க?
அருண் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
தீபக் : கார் ஓட்டி பாரேன்.
அருண் : ??

மனைவி : உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன் என்கிட்ட சொல்லல..
கணவன் : சொன்னேனே… மறந்துட்டியா…
மனைவி : எப்போ சொன்னீங்க… நீங்க சொல்லவே இல்ல…
கணவன் : உன்னை ராணி மாதிரி வச்சு காப்பாத்துவேன்னு நான் சொன்னேன். உனக்கு ஞாபகம் இல்லையா?..
மனைவி : ??