இன்றைய கால கட்டத்தில் நம் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை தான் கொடுக்கிறோமா என்பதை சிந்தித்து பார்த்து செயல்படுங்கள். அப்படி முடியவில்லை கேழ்வரகு பயன்படுத்தி செய்யப்பட்ட இடியாப்பத்தையாவது அடிக்கடி செய்து பரிமாறுங்கள்.உடல் நல்ல ஆரோக்கியம் பெரும்.
செய்ய தேவைப்படும் பொருட்கள்:
பொருள் – அளவு
கடலை மாவு – கால் கப்
கோதுமை மாவு – 1 கப்
கேழ்வரகு மாவு – 1 கப்
உப்புதேவைக்கேற்ப சுடு தண்ணீர் மற்றும் தேவையான அளவு மாவு
செய்யும் முறை:
முதலில் கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுத்து ஆற வைக்கவும்.பின் அதே போன்ற ஆவியில் கோதுமை மாவை வேக வைக்க வேண்டும்.
பின்னர் வறுத்த மாவுகளோடு ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து, ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். அவ்வளவு தான் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு.
வாரத்தில் ஒரு முறையாவது இது போன்று செய்து சாப்பிடுவது நல்லது.