அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகும் தேதி எப்போது..??

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில். இதன் படப்பிடிப்பு 2 மாதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதுவரை பிகில் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடிகர் விஜய் பாடிய வெறித்தனம் பாடல் யூடியூபில் 1 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முழுவதுமே பிகில் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்களை வரும் 19 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.