அதீத ஞாபக மறதியா இருக்கா?

மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக உள்ளது. இந்த மாதுளை பழம் சுவையில் இனிப்பாகவும் அவையே நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த மாதுளம் பழத்தில் கூந்தல் மற்றும் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

மாதுளம்பழச் சாறுடன் இஞ்சிச் சாறை சம அளவு எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், நாள்பட்ட வறட்டு இருமல் தீரும்.

கல்கண்டு, பன்னீர், தேன், மாதுளம்பழச் சாறு நான்கையும் தலா ஒரு டம்ளர் எடுத்து, கலந்து, உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை நெல்லிக்காய் அளவு எடுத்து, இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் படை, தேமல் போன்ற சரும நோய்கள் மறைந்து, சருமம் பொலிவுடன் இருக்கும்.

மாதுளம்பழச் சாறையும் அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால் சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தந்து உடலை நலமுடன் வைக்கும்.

மாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். உடல்நடத்துக்கு அனைத்து நன்மையையும் கிடைக்கும்.