ஆண் மயிலுக்குதான் தோகை உண்டு.
ஆண் சிங்கத்திற்குதான் பிடரி மயிர் உண்டு.
சேவலுக்குதான் வண்ண கொண்டை? உண்டு.
இப்படியாக உலகில் எல்லா விலங்கின ஜீவராசிகளிலும்ஆண் இனம் அழகைப் பெற்று அமர்க்களம் பண்ண…
மனித இனத்தில் மட்டும் பெண் இனத்திற்கு அழகைக் கொடுத்தது இயற்கையின் ட்விஸ்ட்.
இயல்பிலேயே பெண்களுக்கு அழகுணர்ச்சி அதிகம். அழகுபடுத்திக்கொள்வது பெண்களின் அனிச்சை செயல். அதனை அழகுக்கு அழகு சேர்த்தல் என்பார்கள்.
கண்ணாடி பார்க்காத பெண்கள் உண்டா?
தன்னைத்தானே அலங்கரிப்பதில் பெண்ணுக்கு இணை யாருமில்லை.
உலகெங்கும் கோடிக்கணக்கில் கவிதைகள், பாடல்கள் எல்லாம் பெண் அழகைக் குறித்து வர்ணிப்பவையே.
தன்னை சிறு அளவிலெனும் ஒப்பனைக்கு உட்படுத்துவாள் பெண்.
(காதல் கைகூடாத சில பெண்கள், தங்களின் அலங்காரத்தில் ஈடுபாடு இன்றி இருப்பது மட்டும் விதிவிலக்கு)
ஒரு மாறுதலுக்கு இப்படி யோசித்துப்பாருங்கள்.,
“மல்லிகைகள் சூடிய உன் கூந்தல், மூன்றாம் பிறையைப் பழிக்கும் நெற்றி, வானவில் புருவங்கள், கயல் விழிகள், சண்பகப்பூ போன்ற மூக்கு, கண்ணாடிக் கன்னங்கள், சங்கு கழுத்து, தாமரை நெஞ்சங்கள், உடுக்கை போல் சிற்றிடை, தாமரைத்தண்டு போல தளிர்க்கரங்கள், இளவாழைத்தண்டு போன்ற உன் கால்கள்; அடடா ஒரு ஆணுக்குள் இப்படி ஒரு அழகா?
என்று ஒரு ஆணைப் பார்த்து மோகித்து ஒரு பெண் வர்ணித்தால்…
அதைத் தாங்க முடியாத அவன் அவளைப் பார்த்து கோபமுடன், “நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட பொறக்கலையா. செருப்பு பிஞ்சிடும்” என்று சொல்லும்போது நல்லாவா இருக்கு?
(எனக்கே லேசா குமட்டுது)
பெண்கள் மட்டும் அழகாக இருப்பதுதான் விதி. இந்த விதியை எந்த மதியாலும் வெல்ல முடியாது.