மனக்குழப்பத்தை நீக்க மருத்துவமனை வேண்டாம்!!

இந்த முத்திரை நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

மார்பு பகுதிக்கு நேராக வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கொள்ள வேண்டும். இதனை ஒவ்வொரு நாளும் 10 லிருந்து 15 நிமிடங்கள் செய்தால் மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் போன்றவை தானாகவே ஏற்படும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதனை செய்யலாம். மேலும், இதனை அறையில் அமர்ந்து கொண்டோ, அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ செய்யலாம்.

பலன்கள்: கற்பனைத் திறன் வளரும், மனதை கட்டுக்குள் வைக்க உதவும், கோபத்தை எளிதில் கட்டுப்படுத்தலாம், எதிலும் நாட்டமற்ற தன்மை , வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதை அமைத்தி கொள்ள செய்யும்.

மனச்சோர்வை நீக்கி, மனத்தெளிவு, கண்களில் பிரகாசம், மனோபலம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை கொடுக்கும். ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் இருக்காது.மனதில் தன்னம்பிக்கை உற்சாகம் ஏற்படும்.