கோபத்திற்கு முக்கிய காரணமே இதுதான்.!

அடிக்கடி முயற்சிக்காதவைதான் முடியாதவையாகும்.

உழைப்பின் முடிவு ஓய்வைச் சம்பாதிக்கவே.

கோபத்திற்கு மிகப் பெரிய நிவர்த்தி தாமதம்தான்.

1. உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.

2. மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மகிழ்ச்சியாய் இருங்கள்.

விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.

ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான் என்றாலும்,

அவனோடு, அவனுடைய முயற்சிகளும்,

அவன் துவக்கிய காரியங்களும் இறந்துப்போவதில்லை.!

நேற்றைய பொழுதும் நிஜமில்லை,

நாளைய பொழுதும் நிச்சயமில்லை,

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.!

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை.!

முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை.!

முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை.!