சுவையான ப்ரூட்டி சப்பாத்தி செய்வது எப்படி.!

இன்றைய சமையல் பகுதியில், வாழைப்பழ சப்பாத்தியை எப்படி வீட்டிலேயே சுவையாக செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப்,

வாழைப்பழம் – 1,

சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – ஒரு சிட்டிகை,

நெய் – 2 டீஸ்பூன்,

எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு.

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணெய், நெய் கலவை தவிர மற்றவற்றை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.

பிறகு, சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் – நெய் கலவையை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்க வேண்டும்.

இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கு ஏற்றதாகும்.