எப்படி குளித்தல் நமது உடலை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம்?.!!

நாம் தினமும் பொதுவாக காலை எழுந்தவுடன் குளித்து நமது உடலை புத்துணர்ச்சியாக்குவது வழக்கம். அவ்வாறு தினமும் குளிக்கும் நமக்கு பொதுவாக உடல் குளித்தல் மற்றும் தலைக்கு குளித்த என்று இரண்டு வகையாக பிரித்து குளிக்கும் பழக்கம் இருக்கும். பொதுவாக குளித்தல் என்பது தலைக்கு குளிப்பது மட்டும் ஆகும்.

உடல் நலம் பாதிக்கப்படும் பட்சத்தில் மற்றும் குளிர் காலங்களில் குளிரை தாங்க முடியாத நபர்கள் அவர்களின் உடல் நலனிற்க்கேற்ப தலைகுளியல் மற்றும் உடற்குளியலை மேற்கொள்வார்கள். மேலும்., நாம் தினமும் உறங்கி எழுந்தவுடன் சூரிய உதயத்திற்கு முன்னதாக குளிக்கும் வழக்கத்தை வைத்திருந்தால் நமது உடலானது நல்ல புத்துணர்ச்சியுடனும்., ஆற்றலாகவும் இருக்கும்.

இதன் காரணமாகவே தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கண்டிப்பாக குளிப்பது அவசியம். இதுமட்டுமல்லாது இரவில் குளித்த பின்னர் உறங்குவதன் மூலமாக உடல் வெப்பம் மற்றும் மன அழுத்தம் குறைந்து நமது உடலானது பாதுகாக்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நாம் தினமும் கோடை காலத்தில் குளிக்க வேண்டிய முறையை பற்றி இனி காண்போம்.

நல்லெண்ணெய் குளியல்: 

இன்றளவில் உள்ள கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் நாம் கண்டிப்பாக எள்ளு எண்ணெய் என்று அழைக்கப்படும் நலெண்ணையை தலை மற்றும் உடல் பகுதியில் தேய்த்து குளித்து வர வேண்டும். வெயில் காலங்களில் ஏற்படும் வேண கட்டிகள் மற்றும் வியர்க்குரு போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இயலும். இதன் மூலமாக உடல் குளிர்ச்சியும்., சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும் விலக்கம் கிடைக்கும். நல்ல முடிவளர்ச்சிக்கும் உதவுகிறது.

நமது முன்னோர்களின் கூற்றுப்படி பெண்கள் வெள்ளி கிழமை மற்றும் செவ்வாய் கிழமையிலும்., ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இந்த குளியல் மூலமாக உரோமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்., உடலில் இருக்கும் அதிகளவு வெப்பமும் உடலை விட்டு வெளியேறும்.

இதுமட்டுமல்லாது சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும்., பொடுகு தொல்லையானது நீங்கும்., தூக்கமின்மை பிரச்சனையானது நீங்கும்., கண்கள் சார்ந்த பிரச்சனை அறவே நீங்கும். இனி நல்லெண்ணெய் குளியலை மேற்கொள்ள தயாரிக்கும் முறைகள் குறித்து இனி காண்போம்.

குளியல் நல்லெண்ணெய் தயாரிக்கும் முறை:

நல்லெண்ணெய் – 1 கோப்பை.,
வர மிளகாய் – 1.,
பூண்டு – 3 பல்.,
வெந்தயம் – 1/2 தே.கரண்டி.,
மிளகு – 1/2 தே.கரண்டி…

தயாரிக்கும் முறை: 

நல்லெண்ணையை நன்றாக சூடாக்கிய பின்னர் வாரமிளகாய்யை போடவும். இதற்கு பின்னர் வெந்தயம்., பூண்டு மற்றும் மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் கழித்த பின்னர் இறக்கவும். எண்ணெய்யின் சூடு குறைந்தவுடன் உடல் மற்றும் தலையில் தேய்த்து நன்றாக அழுத்தி மசாஜ் செய்யவும்.

இதன் மூலமாக நமது உடலில் ஏற்படும் சளி., தும்மல்., தலையில் நீர் சேர்வது., தலை வறட்சி மற்றும் பாரம் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விலக்கம் கிடைக்கும்., அந்த வகையில் உடலின் வெப்பமானது குறைந்து தோலின் வறட்சியானது நீங்கி பளபளப்பு மற்றும் மினுமினுப்புடன் இருக்கும்.

இந்த நல்லெண்ணையை தேய்த்து குளிக்கும் சமயத்தில் இளம் சூடுள்ள நீரில் கண்டிப்பாக குளிப்பது அவசியம்., இதன் மூலமாக உடலில் தேய்க்கப்பட்டு இருக்கும் எண்ணெய் பிசுக்குகள் நீங்கும்., உடல் தனது குளிர்ச்சியை அளவுக்கு அதிகமாக எடுத்துச்செல்லும் பாதிப்பை குறைக்கும்.

இந்த முறையில் எண்ணெய்யை தேய்த்து குளிக்கும் சமயத்தில் ஷாம்பு போன்ற கெமிக்கலை தேய்த்து குளிக்க கூடாது. பாசிப்பருப்பு மாவும்., நலங்கு பொடி போன்ற மூலிகை வகைகளை உபயோகம் செய்யலாம். தலைக்கு சீயக்காய் பொடியை உபயோகம் செய்யலாம்.