சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு அறிகுறிகள் என்ன?

இன்றுள்ள காலகட்டத்தில் நாம் பல்வேறு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். பலதரப்பட்ட சூழ்நிலையில் பணியாற்றி வரும் நாம் நமது உடலை நலத்தை பாதுகாப்பது அவசியமாகும். நமது உடலை நாம் பாதுகாக்கவில்லை என்றால்., நமது உடல் நலமானது பாதிக்கப்படும். அவ்வாறு நமது உடல் பாதிக்கப்படுவதை நமது சிறுநீரகமும் வெளிப்படுத்தும்.

நமது சிறுநீரகம் சரிவர செயல்படவில்லை என்றால்., நமது உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதற்கான அறிகுறிகள் குறித்தும் இனி காண்போம். இதற்கான அறிகுறிகள் பல இருக்கும் நிலையில்., ஒவ்வொன்றாக இந்த பதிவில் காண்போம்.

தூக்கமின்மை:

உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீரகம் சரிவர வெளியேற்றவில்லை என்றால்., நமது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறாமல் உடலில் தங்குவதால்., கிட்னி சம்பந்தப்ட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தூக்கமின்மை., மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தலைவலி:

நமது ஆரோக்கியம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்திறனை அதிகரிக்க வலுவான எலும்புகளை பராமரிக்க உடலில் வைட்டமின் டி சத்துக்கள் அவசியம். இதற்கு நமது உடலில் EPO என்ற ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக இரத்த சிவப்புணுக்கள் உடலில் அறுபத்தி செய்யப்பட்டு., சிறுநீரகம் சரியாக செயல்படாத நேரத்தில் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் தசைகளில் சோர்வுகள் ஏற்படுகிறது.

தோல் அரிப்பு:

நமது ஆரோக்கியமான சிறுநீரகத்தை செயல்படுத்துவதற்கு இரத்தத்தில் இருக்கும் அசுத்தமான திரவத்தை நீக்கி., அதிகளவிலான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் உடலில் இருக்கும் தாதுக்களும் சரியான அளவை பெறுகிறது. இந்த அளவானது மாறும் சமயத்தில் வரத்தாண்ட தோல் மற்றும் அரிப்புகள் காரணமாக கிட்னியில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

உலோக சுவை மற்றும் சுவாச குறைபாடு:

நமது நாக்கின் சுவையானது திடீரென உலோக சுவையாக இருக்கும் பட்சத்தில்., உடலின் எடையும் குறையும்., உணவின் மீது வெறுப்பும் ஏற்படும். நமது நாக்கில் உலோக சுவை இருக்கும் பட்சத்தில்., உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. சிறுநீரக செயலிழப்புகளின் காரணமாக ஆஸ்துமா., நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய செயலிழப்பு போன்ற பிரச்சனையின் காரணமாகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுமட்டுமல்லாது கணுக்கால் மற்றும் கைகால்களில் ஏற்படும் வீக்கம்., அதிகளவிலான முதுகுவலி., கண்களில் ஏற்படும் வளையங்கள்., உயர் இரத்த அழுத்த நோய் மற்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்று பலவிதமான பிரச்சனைகள் உள்ளது. இந்த பிரச்சனைகளி தவிர்ப்பதற்கு உணவுகளில் உப்பை குறைப்பது., புரதச்சத்துள்ள உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது., இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் பொருட்களை சாப்பிடுவது மற்றும் சிறுநீரின் நிறம் மாறும் சமயத்திலேயே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது போன்ற செயல்களை செய்வதன் மூமாக நமது உடலை பாதுகாக்கலாம்.