பல இல்லங்களில் மனதிற்குள்ளேயே ஆண், பெண் இருவராலும் புதைத்து வைக்கப்படும் ஒரு சோக நிகழ்வு இது.
ஒரு ஆணுக்கு உறவில் உச்சகட்டம் என்பது விந்து வெளியேறும் தருணம். ஆனால் ஒரு பெண்ணின் உச்சநிலையை அந்தப் பெண்ணால் மட்டுமே உணர முடியும்.
உடனிருக்கும் ஆணாலும் அதைக் காண முடியாது. அந்தப் பெண்ணாலும் அதை எளிதாக விளக்க இயலாது.
இருபாலருக்குமே விவரிக்க இயலாத இன்பத்தை சில நொடிகள் அள்ளித்தரும் தருணம் அது. அடி வயிற்றிலிருந்து பிறப்பு உறுப்பு வரை உள்ள தசைகள் சுருங்கி விரிந்து இன்பம் பரப்பும்.
பொதுவாக ஆண்கள் விரைவாக உச்சம் அடைவார்கள். காரணம் அவர்களது மனம், உடல் இரண்டும் காதல் மற்றும் காமத்தில் வெளிப்படையாக ஆர்வமுடன் ஈடுபடுவதால் விரைவில் உச்சகட்ட இன்பம் கிடைத்துவிடும்.
பெண்கள் பொதுவாக தங்கள் மனதிலுள்ள ஆர்வத்தை அதிகமாக வெளிக்காட்டுவதில்லை. கூச்ச உணர்வுடன் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். அதிகமாக பேசவேண்டும், தழுவவேண்டும், கொஞ்சவேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்கள்.
படிப்படியாக காமத்தில் தங்களை ஈடுபடித்திக் கொண்டு உச்ச நிலைக்குச் செல்வார்கள். இருவரும் இணைந்திருக்கும் பொழுது ஆண் விரைவில் உச்சமடைந்து சோர்ந்து விட்டால் அந்தப் பெண் விரக்தி அடைவார்.
இதை ஆங்கிலத்தில் Premature Ejaculation (PME), தமிழில் விந்து முந்துதல் என்று சொல்வார்கள். உறவில் அதிக ஆர்வம், அதிக பதட்டம் அல்லது பயத்துடன் உறவில் ஈடுபடுதல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவு கொள்ளுதல், உறவுக்கு முந்தைய இன்பங்களில் ஈடுபடாமல் நேரடியாக புணர்ச்சியில் இறங்குதல், இவை தவிர சில ஆண்களுக்கு காரணம் இல்லாமலும் இந்த நிலை ஏற்படும்.