தேவையான பொருட்கள் :
துவரம்பருப்பு – கால் கப்
வெள்ளரிக்காய் – 1
பால் – கால் கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
பச்சை மிளகாய் – 4
சின்ன வெங்காயம் – 5
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு மற்றும் கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
பருப்பை குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்ராக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் பச்சைமிளகாய், சீரகம், சின்ன வெங்காயம், மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு மெலிதாக அரைத்து கொள்ளவும்.
மேலும்,வெள்ளரிக்காயை சுத்தமாக தோல் நீக்கி கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதனுடன் பால் சேர்த்து நன்ராக வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள்.
நன்ராக கொதித்தவுடன் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை கொட்டி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின்னர் அதனை இறக்கி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி!!