காம உணர்வை தொடர்ந்து அடக்க என்ன ஆகும்??

இந்த உலகத்தில் பிறந்த மனிதனும் விலங்கும் காம உணர்வு இன்றி இருக்கவே முடியாது., இந்த காம உணர்வு அளவோடு இருக்கும்பட்சத்தில் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. உடலுக்கும் மனதிற்கும் இது நல்லது. இந்த காம உணர்வை அடக்க முடியாத பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள்., கொலைகள் மற்றும் கொள்ளைகள் போன்றவை நடக்கிறது. கலவி உணர்வுகளை அதிகளவில் கட்டுப்படுத்தும் சமயத்தில் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அதிக அளவில் எழுகின்றது.

இந்த பிரச்சனைகள் காரணமாக கோபம்., அழுகை., ஆனந்தம்., ஆசை., வெறுப்பு மற்றும் காமம் போன்ற மன உணர்வுகளுக்கு மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொண்டால் எந்தவிதமான பிரச்சனையும் கிடையாது. அந்த நேரத்தில் அதிகமாக கலவி உணர்வுகளை வெளிப்படுத்துவதன் அதன் காரணமாக பல குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. இந்த உலகத்தில் எங்கு பாலியல் ரீதியான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றாலும் அதற்கு முதற்காரணம் அவர்களுக்குள்ளான காம உணர்வுகளை அடக்கி வைக்க தெரியாத நிலைதான்.

இந்த காம உணர்வுகளை அதிகளவில் அடக்கி வைப்பதன் மூலம் மனநோய்., தலைவலி., திடீர் காய்ச்சல்., இடுப்புவலி., உடல்பலவீனம்., நடுக்கம்., மார்புவலி
மற்றும் மயக்கம் போன்றவைகள் ஏற்பட்டு., இந்த நோய்களின் காரணமாக இதய நோய் கூட வரும்.வெள்ளை பூடு., முருங்கைக்காய்., முருங்கைக்கீரை மற்றும் வெங்காயம் போன்ற உணவுகளை அதிகளவில் சாப்பிடுவதன் மூலமாக காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில்., இந்த விஷயத்தை யாரும் இதுவரை நிரூபிக்கவில்லை.

அதே சமயத்தில் கொத்தமல்லி., முட்டைக்கோஸ் போன்ற உணவுகளை உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. கலவி உணர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.  மேலும்., உடலில் கொழுப்புகள் அதிகம் நிறைந்தவர்கள் தான் இந்த கலவி உணர்வுகளை ஏற்படுத்தும் ஹார்மோன் அதிகம் சுரக்கிறது என்று கூறப்படுகிறது. ஆன்மீகம் மற்றும் புராண நூல்களை வாசிப்பது., நல்ல இசையை கேட்பதன் மூலமாக காம உணர்வுகளை மெல்ல மெல்ல குறைக்கலாம்.