சந்திரயான் சறுக்கல்: கைகொட்டிச் சிரிக்கும் பாகிஸ்தான்!

‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு முன்னர் அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. சந்திராயன் பற்றிய பிரமாண்ட எதிர்பார்ப்பை இந்தியா தோற்றுவித்திருந்த நிலையில், சாதாரண அறிவியல் சறுக்கல், அரசியல் தோல்வியென்றளவிற்கு மாறியுள்ளது.

சந்திராயன் விவகாரத்தை பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகத் உசைன் கிண்டல் செய்துள்ளார்.

‘சந்திரயான் – 2’ விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் ட்விட்டரில் #INDIAFAILED என்ற ஹேஷ்டேக் பாகிஸ்தானியர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது.

பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபகத் உசைன் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் தோல்வியையும், பிரதமர் மோடியையும் கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.

உசைன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான் – 2 தோல்விக்கு நான் தான் காரணம் என்பது போல் இந்தியர்கள் என்னை கிண்டல் செய்வதைக் கண்டு ஆச்சிரியமாக உள்ளது” என்று பதிவிட்டு ‘இந்தியா தோற்றுவிட்டது’ என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.