ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக, பிரதமர் ரணில் கூறியதாக பெரும்பாலான ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன.
இந்நிலையில் குறித்த தகவல் பொய்யானதென கூறி பிரதமர் ரணில் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தனது நோக்கங்களை கட்சியின் செயற்குழுவுக்கு அறிவிப்பேன் எனவும் அது குறித்து அவர்களே தீர்மானத்துக்கு வருவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை ரணில் கூறியுள்ளது ஆனால் உண்மையில் இது அல்ல கீழ் உள்ளவை தான் இடம் பெற்றது முக்கிய சம்பவங்களை திசை திருப்புவதில் ரணில் வல்லவர் அது தான் இது வேறு எதுவும் அல்ல… என கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
அங்கு இவ் உரையாடல் இடம் பெற்றதை முதலில் வெளிப்படுத்தியவர்களே ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களே அப்படி இருக்கையில் எப்படி அமைச்சல் கபீர் ஹாஷிம் வெளியேறிய விடயம் ஊடகங்களிற்கு தெரியும் உடகங்களை குற்றம் கூறுவதை விடுத்து கட்சியின் இரகசியத் தன்மையை எப்படி கட்டிக்காப்பது என கட்சி உறுப்பினர்களிற்கு ஐக்கிய தேசிய கட்சி கற்றுக் கொடுக்க வேண்டும் என சிரேஸ்ர ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களமிறங்கவுள்ளேன்”: ரணிலின் கருத்தால், கட்சிக்குள் முரண்பாடு
ஜனாதிபதி தேர்தலில் நானே வேட்பாளராக களமிறங்கவுள்ளேன். கட்சியை ஒன்றிணைத்து தேர்தலுக்கு முகங்கொடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கையாள தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சந்திப்பின்போது சஜித், -ரணில் இருவரையும் தனித்து கலந்துரையாடவைக்க கட்சியின் சிரேஷ்ட தலைமைகள் முயற்சியெடுத்துள்ளதுடன் இந்த சந்திப்பை நாளை ஞாயிறன்று நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த இழுபறி நிலை நீடித்துவருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் ரணில் அணி, – சஜித் அணி என இரண்டு அணிகளாக செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கபீர் ஹாசீம், நவீன் திசாநாயக, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார, தயா கமகே உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆரம்பத்தில் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்டணி உருவாக்கம் தொடர்பாகவும் பேசிய நிலையில் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்ற பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நானே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தீர்மானம் எடுத்துள்ளேன். இது குறித்து உங்களின் நிலைப்பாடு என்னவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிரேஷ்ட உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார். அதன்போது கட்சியின் உறுப்பினர்கள் பலர் குறிப்பாக அமைச்சர் கிரியெல்ல, நவீன், தயா கமகே, மத்துமபண்டார ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளனர். நீங்கள் கட்சியின் தலைவர் என்ற விதத்தில் உங்களுக்கு அதற்கான உரிமை உள்ளது என ஆமோதித்த கருத்துக்களை இந்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
எனினும் இதன்போது அமைச்சர்களாக கபிர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம ஆகியோர் மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர், இப்போது ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் சஜித் அலை ஒன்று உருவாகி அவருடன் இணைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. அவருக்கான ஆதரவும் ஐக்கிய தேசிய கட்சிக்கான வெற்றி வாய்ப்பும் அதிகமாக தென்படுகின்றன. ஆகவே இது குறித்து நாம் கவனம் செலுத்தினால் ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற கருத்தினை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
இதன்போது தயா கமகேவும் இந்த கருத்தினை ஏற்றுக்கொண்டு இது குறித்து கவனம் செலுத்துவது நல்லதென்ற கருத்தினை கூறியுள்ளார்.
எனினும் இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் ரணில் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி வேட்பாளர் என்ற காரணத்தை கூறிக்கொண்டு மக்களை சந்திக்கின்ற காரணத்தினால் தான் அவருக்கு மக்கள் கூட்டம் கூடுகின்றது. இதுவே நானே ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற கருத்தை கூறி உறுதியாக நாம் கூட்டங்களை கூட்டினால் இப்போது சஜித் பிரேமதாசவிற்கு கூடும் கூட்டத்தை விடவும் பத்து மடங்கு ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவை தெரிவிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் கிரியெல்ல இதனை ஏற்றுகொண்டதுடன் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க வேண்டாம் என கூறியும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சினை பெற்றுக்கொண்டதாகவும் , முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜன முன்னணியின் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக் ஷவை இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் , கட்சியின் ஒழுங்கு விதிமுறைகளை மீறி கூட்டங்களை ஏற்பாடு செய்து சஜித்தை பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதியுடன் இரகசியமாக பேசி தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல அமைச்சர் கபீர் ஹசீமுடன் வாக்குவாதததில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறு கட்சியின் யாப்பினை மீறி செயற்படுவதென்றால் கட்சியை விட்டு வெளியேறி தனித்து செயற்படுங்கள் எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இடையில் குறுக்கிட்ட அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இருவரையும் சமாதானப்படுத்தியதுடன் மீண்டும் சஜித் பிரேமதாச விவகாரத்தை நினைவுபடுத்தியுள்ளார்.
இவ்வாறு கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின் ஆதரவும் உள்ள ஒருவரை ஓரங்கட்டி தனித்து முடிவெடுப்பதன் மூலமாக இறுதியாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவுகளே ஏற்படும். இதற்கு இடமளிக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு. இது குறித்து பேசி இறுதித் தீர்மானம் எடுப்போம் என்று மலிக் கூறவும் கூறினார்.
, இதற்கு பதில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியாக பேசி தீர்மானம் எடுக்க சஜித் தயாராக இல்லாத காரணத்தினால் தானே அவர்கள் தனித்து செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் எவ்வாறு பேசித் தீர்ப்பது என்பதை வினவியுள்ளார்.
இதன்போது பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முயற்சிகளை எடுக்க வலியுறுத்திய அமைச்சர்களான கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்கிரம இருவரும் அடுத்த கூட்டத்தை கூட்ட முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர் சஜித் பிரேமதாசவையும் தனிதடது சந்திக்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளளனர்.