இலங்கையின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மலிங்கா. இவரின் காதல் கதையின் சுவாரஷியத்தை பற்றி இங்கு பார்க்கலாம்..
இலங்கை கிரிக்கெட் வீரர்களில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக தனது கிரிக்கெட் பயணம் வாழ்க்கையை ஆரம்பித்தார் மலிங்கா.
கிரிக்கெட்டின் மீது அதிக அக்கறையும் கொண்டவர் இவர். எதையும் ஓப்பனாக பேசும் குணம் கொண்ட இருப்பதாலே மலிங்காவை பிடித்தற்கு முக்கிய காரணம் என்று தன்யா மனம் திறந்து கூறியுள்ளார்.
மிகவும் எளிமையான குணம் கொண்ட மலிங்காவின் காதல் கதை மிகவும் சுவாரசியம் நிறைந்தது.
இவர் முதல் முறையாக தனது காதல் மனைவி தன்யாவை ஹொட்டல் ஒன்றில் வைத்து விளம்பர நிகழ்ச்சியின் போது சந்தித்துள்ளார்.
அப்போது, அந்த நிகழ்ச்சியின் மேலாளராக இருந்தவர் தன்யா. Hikkaduwa இல் உள்ள ஹொட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பே, இவர்கள் இருவரும் திருமணத்தில் இணைவதற்கு காரணமாக அமையும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை.
கண்டதும் காதல் இவர்களுக்கு நடக்கவில்லை. தன்யாவுக்கு அப்போது கிரிகெட்டின் மீது ஆர்வம் குறைவு தானாம். அதனாலேயே மலிங்காவிடம் அதிகம் பேசவில்லையாம்.
அதன் பின்னர், இரண்டாவதாக, Galle இல் உள்ள ஹொட்டலில் இருவரும் சந்தித்துக்கொண்டபோது, தங்களது தொலைபேசி எண்களை பகிர்ந்துகொண்டனர்.
அதன்பிறகு தினமும் தொலைபேசி மூலம் அதிக உரையாடியுள்ளனர். கிரிக்கெட் விளையாடுவதற்காக லசித் மலிங்கா, வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இவர்கள் மனதால் பேசிக்கொண்ட நேரம் அதிகமானது.
ஒரு ஆண்டு கடந்துவிட்ட நிலையில், தனது மனதுக்குள் மறைத்துவைத்திருந்த காதலை தன்யாவிடம் தெரியப்படுத்தியுள்ளார் மலிங்கா. ஆனால், இதற்கு தன்யா சொன்ன பதில், எனது பெற்றோரிடம் சம்மதம் வாங்குங்கள். அதன் பிறகு நான் உங்களை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார்.
பெற்றோரின் சம்மதம் வேண்டும்
இதனைத்தொடர்ந்து, தன்யாவின் வீட்டிற்கு சென்ற மலிங்கா, அங்கு அவரது அம்மா மற்றும் சகோதரரை சந்தித்து பேசியுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்திற்கு தன்யாவின் தந்தை சம்மதம் முக்கியம் என்பதால், அமெரிக்காவில் இருந்த தன்யாவின் தந்தை வந்தவுடன் அவரையும் சந்தித்துள்ளார்.
தனது பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் எனது தந்தை, இதனால் எனது தந்தையின் சம்மதம் மிக முக்கியம், இதனால் அவரது ஆசிர்வாதத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளார் தன்யா.
அதன்படியே, இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் திகதி இவர்களது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
லசித் மலிங்கா எதனையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர். இதுவே அவர் மீது எனக்கு காதல் வர காரணமானது என தன்யா ஒரு முறை பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.