இளம்பெண்களின் மாதவிலக்கு பிரச்சனைக்கு தீர்வு.!

பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் எள்ளு குழம்பு!! எப்படி செய்வதென பார்க்கலாம். மேலும், வயதுக்கு வந்த இளம்பெண்களுக்கு எள்ளு மிகவும் அத்தியாவசியமான உணவாகும்.

தேவையான பொருட்கள்:

எள் – 1/4 கப்,
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
சுட்டதேங்காய் – 4 சில்,
தனியா – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
கல் உப்பு – தேவைக்கு, கறிவேப்பிலை – 1 பிடி,
புளி – 1 எலுமிச்சை அளவு,
வறுக்க எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்.
தாளிக்க
நெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்.

எள்ளு குழம்பு செய்முறை: 

கடாயில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காய்ந்த பின்னர் அதில், துவரம் பருப்பு, எள், காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வருது எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர், வறுத்த இந்த பொருட்களுடன் சுட்ட தேங்காய், மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து விழுதாக எடுத்து கொள்ள வேண்டும். தேவையான அளவு புளியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசல், உப்பு, ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக, நெய்யில் கடுகு தாளித்து கொதிக்கும் குழம்பில் கொட்டி கிளறி சூடாக பரிமாறிமாவும்.

சுவையான எள்ளுக்குழம்பு ரெடி!!