விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் தன்னைத்தானே வருத்திக்கொள்வது மற்றும் மனக்கவலைகள் ஏற்படுத்துவதால் தற்கொலைக்கான எண்ணம் தூண்டப்படுவதாகவும். இதற்கு தூக்கமின்மை தான் காரணம் என்றும் அமெரிக்க ஆய்வில் கூறுகிறது
இதற்காக ஸ்லீப் சஞ்சிகை 8,462 விளையாட்டு வீரர்களிடம் மற்றும் 1,10,496 மாணவர்கள் ஆய்வுகளை நடத்தி வெளியிட்டது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா பல்கலைகழகத்தின் முன்னணி எழுத்தாளராகத் திகழும் பேராசிரியர் தியா ராம்சே இதைப்பற்றி பேசுகையில். கல்லூரி மாணவர்களிடம் ஏற்படும் மனக்கவலைகள் மற்றும் மனநோய் போன்ற பிரச்சனைகள் அதிகமாகி. தற்கொலைக்கான எண்ணம் தோன்றுகிறது என கூறியுள்ளார்.
தூக்கமின்மை என்பது நம்மை இவ்வளவு பிரச்சனைகளுக்கு ஆளாக்குகிறது என்றால் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு நாளும் தூக்கமிமையால் இரவு நேரங்களில் விரைவில் உறங்குவது கிடையாது. இது மனா நோயை ஏற்படுத்த 20 சதவீதம் வாய்ப்புள்ளது
உறக்கமின்மையால் அதிகரிக்கும் ஆபத்துகளின் பட்டியல்:
21 சதவீதம் மனச்சோர்வு.
24 சதவீதம் தன்னம்பிக்கையின்மை.
24 சதவீதம் கோபம், 25 சதவீதம் கவலை.
25 சதவீதம் தன்னை வருத்திக்கொள்ளும் விருப்பம்.
செயல்பாட்டு பிரச்சினைகளுக்கு 28 சதவீதம்.
மற்றும் தற்கொலை எண்ணம் 28 சதவீதம்.
பேராசிரியர் மைக்கேல் கிராண்டர் கூறுகையில் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமாகும் என்றும். நாம் சுறுசுறுப்பாக செயல்படவும் மன அமைதிக்கும் தூக்கம் மிக மிக அவசியமாகும்.