இன்றுள்ள சூழ்நிலையில் நாம் நமது உடலை பாதுகாப்பாக பராமரித்து., நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது முக்கியமான ஒன்றாகும். நமது ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் நமது குளியலும் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. அதிகாலையில் எழுந்து குளித்தால் மட்டுமே., நம்மால் அன்றைய பணிகளை எந்த விதமான தடையும் இன்றி., உற்சாகமாக செய்யலாம்.
நாளொன்றுக்கு இரண்டு முதல் மூன்று வேலைகள் குளித்து வந்தால் நமது உடலின் ஆரோக்கியமானது அதிகரித்து., நமது உடல் நலம் பெறுகிறது. இரவு வேளைகளில் குளிப்பதன் மூலமாக., நமது உடலில் பல மாற்றங்களும் அற்புதங்களும் நிகழ்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் சுத்தமான நீரில் குளித்து நமது உடல் பெற்ற ஆரோக்கியத்தை நாம் அறிவோம்.
இரவில் குளிப்பதன் மூலமாக தூக்கத்தின் தரம் மற்றும் சுகாதாரம் உயர்த்தப்பட்டு., உளவியல் ரீதியாகவும் பல நன்மைகளை தொடர்ந்து வழங்குகிறது. பகல் நேரத்தில் கடுமையான வெயிலின் தாக்கத்தில் இருந்து பணியாற்றி., இரவில் எண்ணெய் பசை கொண்ட முகத்துடன் உறங்க சென்றால் முகப்பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்கு நன்றாக குளித்து இரவில் உறங்கினால் முகப்பருக்கள் வராமல் பார்த்து கொள்ளலாம்.
எந்த சமயத்தில் இரவில் குளித்தவுடன் விரைவாக உறங்க வேண்டும்., பருவ காலங்களில் ஏற்படும் அலற்சியை குறைப்பதற்கும்., வெளியே சென்று வரும் நேரத்தில் ஏற்படும் கிருமிகள் நம்மை தாக்காமல் இருப்பதற்கும்., தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்வதற்கும்., ஆரோக்கியமான சருமத்தை பெற்று., ஹார்மோன்களின் சுழற்சியை சரி செய்வதற்கும் இரவு வேளையில் குளிப்பது அவசியம்.