சுவையான மக்காச்சோள இடியாப்பம் செய்வது எப்படி தெரியுமா?!

மக்காச்சோளத்தை பெரும்பாலான அளவில் சேர்த்து தயாரிக்க படும் சத்துமாவு அதிகப்படியான ப்ரோடீன் நிறைந்த உணவாகும். இதனால் குழந்தைகள் வலுவான உடலமைப்பை பெறுவர். மேலும், இளவயது பெண்கள், கர்ப்பிணி என அனைவருக்கும் வழங்க வேண்டிய முக்கிய உணவாகும் அதைவைத்து இடியப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: 

மக்காச்சோளம் மாவு- ஒருகப்,

உப்பு சிறிதளவு,

எண்ணெய் ஒரு ஸ்பூன்.

செய்முறை: 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து வானெலி சூடேறியதும்., அதில் மக்காச்சோளமாவை உதிரி உதிரியாக சேர்த்து, கிண்டி வறுக்கவும்.

வறுத்த மாவை ஆறவைத்துவிட்டு, மாவு நன்றாக ஆறியதும், ஓரு ஸ்பூன் எண்ணெய், உப்பு, கொஞ்சம் வெந்நீர் விட்டு மாவை பிசையவும்.

பிசைந்த மாவை எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும். பிழிந்தமாவை வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

பின்னர் இதனுடன் சர்க்கரை அல்லது தேங்காய் துருவல் சேர்த்து உண்ணலாம் அல்லது வெங்காயம் , காய்ந்த மிளகாய் போட்டு தனித்து காரமான சுவை கொண்ட உணவாகவும் உண்ணலாம்.