நாகப்பழம் என்று நாவற்பழமென்றும் அழைக்கப்படும் பழமானது., நமது குழந்தை பருவத்தில் பள்ளிக்கூடத்தின் வாயிலில் விற்பனை செய்ததையும் அதனை போட்டி போட்டுகொண்டு வாங்கி உண்பதையும் மறக்க முடியாது.
நாவற்பழத்தை சாப்பிட்டுவிட்டு நாக்கில் வண்ணம் மாறியவுடன் அதனை நமது நண்பர்களிடம் காண்பித்து எனக்கு எந்த அளவில் வண்ணம் பிடித்துள்ளது., உனக்கு குறைவாகத்தான் பிடித்திருக்கிறது என்று விளையாடிய பருவமெல்லாம் எத்தனை இன்பங்கள் பெற்றாலும் திரும்ப கிடைக்காததது.
இந்த பழத்தின் மீது உள்ள அலாதி பிரியத்தில் சிலர் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உண்டு. எந்த உணவும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது நம்மையல்ல. இந்த பழத்தில் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை அதிகளவில் உள்ளது.
நாவற்பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுச்சத்துக்களின் காரணமாக சிறுநீர் கழிவு., சீதபேதி., இரத்த பேதி., போன்றவை குணமாகும். இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று கூறுவார்., இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய்யானது கட்டுப்படுத்தப்படும். மேலும் பழத்தின் கொட்டைகளை வீசியெறியாமல்., சேகரித்து தூளாக அரைத்து தினமும் சுத்தமான நீரில் காலையிலும்., மாலையிலும் பருக வேண்டும்.
இதன் மூலமாக மூல நோய்., வாயு., கல்லீரல் நோய்., கணையத்தில் ஏற்படும் வீக்கம் போன்றவை குணப்படுத்தப்பட்டு உடல் நலமானது பாதுகாக்கப்படும். பணிச்சுமை மற்றும் பிற காரணங்களால் அதிகமாக கடைகளில் சாப்பிடும் அன்பர்கள் தினமும் நான்கு அல்லது ஐந்து நாவற்பழத்தை உண்டு வந்தால் மூலநோய்யானது கட்டுப்படுத்தப்படும்.
மருத்துவர்கள் ஆலோசனை கூறிவிட்டனர்., செய்தியை படித்துவிட்டேன் நாவற்பழத்தை தினமும் உண்ணலாம் என்று கூறியுள்ளனர் என்று சொல்லிவிட்டு அளவுக்கு அதிகமாக எதனையும் உண்ணக்கூடாது., நாவற்பழத்தை அதிகமாக உண்பதால் தொண்டை தொடர்பான நோய்கள் மற்றும் குடல் கோளாறு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே அளவாக சாப்பிட்டு பாதுகாப்பை பேணவும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”.!!